லங்காசிறி செய்திகள்
இந்த விவரக்குறிப்பு பிப்ரவரி 2025 இல் புதுப்பிக்கப்பட்டது
லங்காசிறி இணையதளத்தின் பல்வேறு பிரிவுகள் வெவ்வேறு நாடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன், லங்காசிறி இணையதளம் அதன் சகோதர இணையத்தளங்களான சினிடடி, தமிழ் போகஸ், தமிழ்வின், சினிஉலகம், ஹாய்2சினிமா, மனிதன், லங்காசிறி பாக்கெட், லங்காசிறி டொபிக், லங்காசிறி எவ் எம், லங்காசிறி டிவி, ஒருபொய்ன்ட், லங்காசிறி கனெக்ட், கனடா மிரர், ஜே வி பி நியூஸ் மற்றும் கல்லறை. லங்காசிறியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி இந்த நிறுவனம் நவம்பர் 2011 ல் பதிவுசெய்யப்பட்டு ஜனவரி 2002 ல் செயல்பட ஆரம்பித்தது. இலங்கைப் பிரிவு வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட் நெட்வெர்க் நிறுவனத்தின்கீழ் ஜூன் 22 , 2015 ல் பதிவுசெய்யப்பட்டது.
நுகர்வோர் வீதம்
தரவுகள் கிடைக்கவில்லை
உரிமையாண்மையின் வகை
தனியார்
பிராந்திய உள்ளடக்கம்
சர்வதேசம்
உள்ளடக்கத்தின் வகை
இலவசம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட் தியாகராஜன் ராஜனுக்கு மட்டுமே சொந்தமானது.
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2002
நிறுவுனரின் ஈடுபாடுகள்
லங்காசிறி இணையத்தளமானது சிவஞானம் சிறிகுகனினால் உருவாக்கப்பட்டது. சிறிகுகன், தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சகோதரர். சிவஞானம் சிறிகுகன் இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்து தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறார். சிவஞானம் குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
தொடர்பு
Smart Network (Pvt) Limited
No. 295-4/1, George R De Silva Mawatha, Colombo 13
Tel: Sri Lanka: +94 11 331 4421, United Kingdom: +44 208 133 8373, Switzerland: +41 435 080 178, Canada: +1 647 694 1391, France: +33 182 880 284, Germany: +49 231 2240 1053, United States of America: +1 678 389 9934, Australia: +61 291 881 626
Email: lankasri@lankasri.com
Website: www.lankasri.com/srilanka/
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
லங்காசிறி இணையத்தளம் மற்றும் அதன் தொடர்புடைய இணையத்தளங்கள் அதன் நிறுவுனர், இயக்குநர்கள் குழுமம் அல்லது அதன் நிறுவன அமைப்பு பற்றிய எந்த விவரங்களையும் வழங்கவில்லை. மேலும், ஸ்மார்ட் நெட்வொர்க் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ இணையத்தளம் இல்லை. எனவே, ஸ்மார்ட் நெட்வொர்க் (பிரைவேட்) லிமிடெட் வழங்கியபடி, பொதுவில் கிடைக்கும் இரண்டாம் நிலை ஆதாரங்கள் மற்றும் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகள் குறிப்பிடுகின்றன. இயக்குநர்கள் மாற்றம் குறித்த சமீபத்திய தகவல்கள் 2021 ஆம் ஆண்டிற்கானவையாகவுள்ள நிலையில், நிறுவனம் தொடர்பான மிக அண்மையான தரவுகள் 2023 ஆம் ஆண்டிற்கானவை.
