This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/18 at 21:25
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

நெத் எவ் எம்

சிங்கள மொழி வானொலியாகிய நெத் எவ் எம் 2005 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது செய்தி, உரையாடல் நிகழ்ச்சி மற்றும் சமய நிகழ்ச்சிகள் அடங்கலாகப் பல நிகழ்ச்சிகiளை ஒலிபரப்புகின்றது. நிகால் எப்பா செனவிரட்ன எப்பா விற்குச் சொந்தமான அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றது. இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தால்; 2017ம் ஆண்டு தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, நெத் எவ் எம் 12.66 வீத வானொலி நேயர்களைக் கொண்டுள்ளது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

12.66%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசிய

உள்ளடக்கத்தின் வகை

இலவச ஒலிபரப்பு

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டடின் முழுப் பங்குகளும் செனவிரத்ன எப்பா 38 .67 பங்குகளையும் எப்பா ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் 61 .33 வீத பங்குகளையும் வைத்துள்ளன. எப்பா ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் முழுமையாக செனவிரத்ன எப்பா விற்குச் சொந்தமானது

வாக்களிக்கும் உரிமை

பத்து வீதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருப்போர் வாக்களிக்க முடியும்

தனி உரிமையாளர்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2005

நிறுவுனரின் ஈடுபாடுகள்

தரவுகள் கிடைக்கப் பெறவில்லை

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

நிஹால் செனவிரத்ன எப்பா, அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் CEO, பணிப்பாளர், மற்றும் பங்குதாரர். இதன் மற்றைய பங்குதாரர் ஈ பி ஏ ஹோல்டிங்ஸ் லிமிடெட். இவர் அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 38.67 வீத பங்குகளை வைத்துள்ளார். ஈ பி ஏ ஹோல்டிங்ஸ் லிமிடெட் 61.33 வீத பங்குகளை வைத்துள்ளது. எப்படியிருப்பினும் நிஹால்தான் ஈ பி ஏ ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தனிப் பங்காளர். ஆக, அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட்டின் தனி உரிமையாளர். 2011 ல், நிஹால் மற்றும் நெத் எவ் எம் இன் பணிப்பாளர் மில்ரோய் பீரிஸ் ஆகியோர், லெக் ஏசியா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சங்க காஞ்சனா வாசலா லியனகே ஆகியோருக்கு எதிராக தங்களை அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளராக வர இடையூறு விளைவித்ததாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிஹால் செனவிரத்ன எப்பா, இலங்கையின் வெளிநாட்டு கொள்கை பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவர் இலங்கையின் இளம் வணிகர் அமைப்பின் இரு அங்கத்தவர்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

சரித் சித்தாத்சாரி – துணை இயக்குனர் - செய்திமற்றும் தற்போதைய நிகழ்வுகள்

தொடர்பு

ASSET Radio Broadcasting (Pvt) Limited

11B Ocean Tower Building, Station Road, Bambalapitya, Colombo 04

News line: (+94) 112507078

General: (+94) 115347347

Email: feedback@nethfm.com

Website: nethfm.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தகவல் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தகவல் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தகவல் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தகவல் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

நெத் எவ் எம் உடைய உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இவ் வானொலியின் உரிமையாண்மை தொடர்பான போதிய தகவல்கள் காணப்படவில்லை. அதேவேளை இரண்டாம்தர தகவல் மூலத்திலும் இதன் ஸ்தாபகர் மற்றும் உரிமையாளர் யார் என்பதை வெளிக்கொணரும் படியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே> கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கப்பெற்ற ஆண்டு வருமான அறிக்கையின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் பங்குடமையாளர்களின் பெயர்கள் பெறப்பட்டன. அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் ஈ ஏ பி ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் ஆகியவற்றின் பிந்திய ஆண்டு வருமான அறிக்கை 2017 ஆகும். நேயர் தரவு வீதம்> இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தால் 2017ம் ஆண்டு தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் இருந்து பெறப்பட்டது . ஜுலை மாதம் 25ம் திகதி 2018 அன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர், அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டை அணுகிய நிலையிலும் அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ