This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/29 at 10:08
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

ஸ்ரீ எவ் எம்

ஸ்ரீ எவ் எம், ஈஏபி ஒலிப்புரக் கம்பனி லிமிட்டட்டினால் நிர்வகிக்கப்படுகின்றது. இதில் ஈ ரி ஐ பினான்ஸ் லிமிட்டட் 2017 வரை பெரும்பான்மை பங்குகளை கொண்டிருந்தது. 2018 மார்ச் மாதம் ஈ ரி ஐ பினான்ஸ் கம்பனி கொண்டிருந்த பங்குகளில் 39.99 % சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு சொத்து முகாமைத்துவ கம்பனியான புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மன்ட் (பிரைவேட்) லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டன. இதனிடையே, ஈஏபி ஒளிபரப்புக் கம்பனி லிமிட்டட்டின் 59.99 % பங்குகள் இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு கம்பனியான பென் ஓல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டன. எலக்சிஸ் இந்திரஜித் லோவெல் அவர்கள் தான் பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரே பங்குதாரராக இருக்கும் அதேவேளை புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மன்ட் (பிரைவேட்) லிமிட்டட் போர்த்துக்கலைத் தளமாகக் கொண்ட பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்நேஷனல் எல்டிஏ நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

இப்போர்த்துக்கேய கம்பனி லைக்கா மொபைல், லைக்கா மற்றும் லைக்கா பிழை (FLY) ஆகியவற்றின் வியாபாரக்

குறியீடுகளுக்குச் சொந்தக்காரராகவுள்ளது. இக்கம்பனி லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச கையடக்க தொலைபேசி வலைப்பின்னலான லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர்களான அல்லிராஜா சுபாகரனோடு இணைக்கப்பட்டுள்ளது. பங்குகளின் கைமாற்றம் இடம்பெற்றதிலிருந்து ஒரு வருடாந்த ரிட்டன் சமர்ப்பிக்கப்படவில்லையாகையால் ஈ ரி ஐ இரண்டு பங்குகளையும் ரணவக்க ஆராச்சிகே மைக்கல் அந்தனி த அல்விஸ் மற்றும் எதினதுர விப்புல த சொய்சா ஆகியோர் ஒவ்வொரு பங்கையும் கொண்டிருக்கின்றனரா என்பது தெளிவற்றதாகவுள்ளது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

5.99%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசிய

உள்ளடக்கத்தின் வகை

இலவச ஒலிபரப்பு

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

ஸ்ரீ எவ் எம், ஈஏபி ஒளிப்புரக் கம்பனி லிமிட்டட்டினால் நிர்வகிக்கப்படுகின்றது. இதில்
ஈ ரி ஐ பினான்ஸ் லிமிட்டட் 2017 வரை பெரும்பான்மை பங்குகளை கொண்டிருந்தது. 2018 மார்ச் மாதம் ஈ ரி ஐ பினான்ஸ் கம்பனி கொண்டிருந்த பங்குகளில் 39.99 % சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு சொத்து முகாமைத்துவ கம்பனியான புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மன்ட் (பிரைவேட்) லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டன. இதனிடையே, ஈஏபி ஒளிபரப்புக் கம்பனி லிமிட்டட்டின் 59.99 % பங்குகள் இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு கம்பனியான பென் ஓல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டன. எலக்சிஸ் இந்திரஜித் லோவெல் அவர்கள் தான் பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரே பங்குதாரராக இருக்கும் அதேவேளை புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மன்ட் (பிரைவேட்) லிமிட்டட் போர்த்துக்கலைத் தளமாகக் கொண்ட பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்நேஷனல் எல்டிஏ நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
இப்போர்த்துக்கேய கம்பனி லைக்கா மொபைல், லைக்கா மற்றும் லைக்கா பிழை (FLY) ஆகியவற்றின் வியாபாரக்
குறியீடுகளுக்குச் சொந்தக்காரராகவுள்ளது. இக்கம்பனி லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச கையடக்க தொலைபேசி வலைப்பின்னலான லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர்களான அல்லிராஜா சுபாகரனோடு இணைக்கப்பட்டுள்ளது. பங்குகளின் கைமாற்றம் இடம்பெற்றதிலிருந்து ஒரு வருடாந்த ரிட்டன் சமர்ப்பிக்கப்படவில்லையாகையால் ஈ ரி ஐ இரண்டு பங்குகளையும் ரணவக்க ஆராச்சிகே மைக்கல் அந்தனி த அல்விஸ் மற்றும் எதினதுர விப்புல த சொய்சா ஆகியோர் ஒவ்வொரு பங்கையும் கொண்டிருக்கின்றனரா என்பது தெளிவற்றதாகவுள்ளது.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1999

நிறுவுனரின் ஈடுபாடுகள்

சுவர்ணவாஹினி தொலைக்காட்சியை நிர்வகிக்கும், ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனம் எதிரிசிங்க குடும்பத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது. 1930 ல் ஈ.ஏ.பி எதிரிசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈ.ஏ.பி ஹோல்டிங்ஸ் லிமிடெட் ( ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனத்தின் தாய் நிறுவனம்), ஆரம்பத்தில் நகை அடகு பிடிப்பதில் ஈடுபட்டது. பின்னர், அந்நிறுவனம், தனது கிளைகளை விரிவாக்கி வேறு பல துறைகளில் கவனம் செலுத்தியதுடன், சரவணா பைனான்ஸ் மற்றும் எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (ETI) லிமிடெட் ஆகிய இரு நிதி நிறுவனங்களை ஸ்தாபித்தது. அத்துடன், ஒலிபரப்பு, விருந்தோம்பல், தங்கநகை, மற்றும் திரையரங்கு ஆகியவற்றிலும் ஈடுபட்டது. 1974 ல் ஈ.ஏ.பி எதிரிசிங்க இறந்தபின்னர், அவரின் மனைவி சோயா எதிரிசிங்க 25 தினை நிறுவனங்களை கொண்ட நிறுவனத்தை பொறுப்பெடுத்தார். இவர், லயன்ஸ் கழகத்தின் முதலாவது பெண் ஆளுநராக பதவி வகித்தார்(2003 - 2004). அத்துடன், ஜனசர பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பணி செய்தார். இவர் 2015 ல் இறந்தார். அதன் பின்னர், ஜீவக, நாலக, அசங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் பொறுப்பெடுத்தனர்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 2018ம் ஆண்டிற்கான வருடாந்த வருமான அறிக்கையின்படி, தோமஸ் மத்தியு என்ற மலேசியாவைச் சேர்ந்த நபர் இதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

தரவுகள் கிடைக்கவில்லை

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

அசங்க சிறிமால் எதிரிசிங்க - ஸ்வர்ணவாஹினி பைனான்சியல் சேர்விசெஸ் பி எல் சி யின் நிறைவேற்று பணிப்பாளர். இவர் ஈ ஏ பி குழுமத்துடன் இணைந்த பதினைந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளராகவுள்ளார். 2018 ல், அசங்க சிறிமால் எதிரிசிங்கவுடன் மேலும் மூவருக்கு நாட்டை விட்டு வெளியேற, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தடை விதித்ததாக கூறப்படுகின்றது 2018 ஜூலை 10 ல், இலங்கை மத்திய வங்கி, மேற்குறிப்பிட்டவர்களின் சொத்து விபரங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் தகவல் கோரியிருந்தது.
2018 ல் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தரவுகளில், இவர் பணிப்பாளராகவுள்ளதாக பதியப்பட்டுள்ளது.

தொடர்பு

EAP Broadcasting Company Limited

No.676 A2, Galle Road, Colombo 3

Tel: +947 534 534

Website: www.eapholdings.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

ஈஏபீ ஹோல்டிங்ஸ்சின் உத்தியோகபூர்வ வலைத்தளம் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதனால் கம்பனியின் தற்போதைய உரித்தாண்மை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வது சுலபமாக உள்ளது. எனவே MOM ஆய்வு நியதி கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டன்களில் இருந்து விபரங்களை சேகரிப்பதற்கு மேலதிகமாக, பல செய்திப் பத்திரிகை அறிக்கைகளையும் உசாவியது. 2017 ஆம் ஆண்டிற்கான தரவுகளை கிடைக்கக் கூடிய மிகவும் அண்மைக்கால தரவுகளாகும். எனினும் பங்குகளின் கைமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் 2018 ஆம் ஆண்டிற்குரியவையாகும். மேலே குறிப்பிடப்பட்டவாறு, புளு சமிட் கெப்பிட்டல் (பிரைவேட்) லிமிட்டட் மற்றும் பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் ஆகியவற்றிற்கான பங்குகள் கைமாற்றத்தின் பின்னர் ஈஏபீ ஒளிபரப்புக் கம்பனி லிமிட்டட்டினால் ஒரு வருடாந்த ரிட்டன் சமர்ப்பிக்கப்படவில்லை. புளு சமிட் (பிரைவேட்) கெப்பிட்டல் லிமிட்டட்டிற்கும் ஒரு உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை. புளு சமிட் கெப்பிட்டல் (பிரைவேட்) லிமிட்டட் தொடர்பான தகவல்கள் சிங்கப்பூர் கம்பனி பதிவாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. 2017 ஆம் ஆண்டிற்கான சுவர்ணவாஹினியின் வாசகர் தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகம் (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டது. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 25 ஆந் திகதி ஈஏபீ ஒளிப்பரப்புக் கம்பனி லிமிட்டட்டை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ