சிரச எவ் எம்
1993 இல் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவை 1995 கு முன்னர் இருபத்தி நான்கு மணி நேர சேவை வழங்கும் முதல் சிங்கள வானொலியாக உருவானது. இதன் சகோதர வானொலிகளாக தமிழில் சக்தி எவ் எம், ஆங்கிலத்தில் ஜெஸ் எவ் எம் மற்றும் லெஜெண்ட்ஸ் எவ் எம் . அதேவேளை சிங்கள தமிழ் இளையோர் சேவை என்பனவாகும்.
நுகர்வோர் வீதம்
12.88%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசிய
உள்ளடக்கத்தின் வகை
இலவச ஒலிபரப்பு
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
சிரச எவ் எம், எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடினால் நிர்வகிக்கப்படுகின்றது. சிரச எவ் எம் தமது துணை நிறுவனமென எம் பி சி தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. கப்பிட்டல் மஹாராஜா கூட்டமைப்பு நிறுவனத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள இரண்டு நிறுவனங்களான கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் 94 .56 வீத பங்குகளையும் விஷன் லங்கா (பிரைவெட்) லிமிட்டட் 5 .43 வீத பங்குகளையும் மொத்தமாக 18 ,389 ,510 பங்குகளைத் தம்வசம் கொண்டுள்ளன.
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1994
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ராஜேந்திரம் மகாராஜா மற்றும் ராஜேந்திரம் ராஜ மகேந்திரன் ஆகியோர் சிரச டிவி யின் ஸ்தாபகர்களும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன ஸ்தாபகர்களுள் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகன்களுமாவர். ராஜேந்திரம் மகாராஜா 'வட்டி' என்ற சொந்த இலச்சினையைக் கொண்ட ஒரு தொழில்முயற்சியாளரும் ஹில்ட்டன் ஓட்டலின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியவருமான பத்மா மகாராஜாவை மணமுடித்தார். அவர் 2016 ஆம் ஆண்டில் காலமானார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் கனிஸ் ராஜேந்திரத்தை மணமுடித்தார். அவர் இந்நிறுவனத்தின் கீழ்வரும் ஒரு கம்பனியான ரியுமஸ் சலூனின் ஊநுழு ஆவர். இவ் இரு சகோதரர்களும் இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்ற அதேவேளை ராஜேந்திரம் மகேந்திரராஜா காலப்போக்கில் ஓய்வு பெற்றார். 2018 இல் ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகன் சசீந்திரன் ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையே, ராஜமகேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். ராஜேந்திரம்; மகாராஜா மற்றும் பத்மா மகேந்திரன் தம்பதிகளின் மகனாகிய பிரதீப் மகாராஜாவும் இந்நிறுவனத்தில் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். 2015 இல் பிரதீப் மகாராஜா இலங்கை மேர்சண்ட் வங்கியின் (MBSL) பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
லக்ஷ்மி ஜயசிங்க தற்போதைய எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், இதற்கு முன்னர், வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தகவல் மற்றும் வியாபாரத் துறையின் பணிப்பாளராகவும், எம்ரிவி எம்பிசி நிறுவனங்களின் விற்பனைப் பணிப்பாளராகவும், முகாமையாளராகவும், ஓ எல் ஈ ஸ்பிரிங் பொட்லெர்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் முக்கிய கணக்கு மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சிரச அலைவரிசையின் தலைவராக சஜித் ராமநாயக்க உள்ளார்
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
சாந்தி பகிரதன் எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் குழுப் பணிப்பாளராகவுள்ளதுடன் ஸ்ரெய்ன் கலையகத்தின் தலைவராகவும் உள்ளார். இவ்விரு நிறுவனங்களும் வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக மகாராஜா நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவிக்கிறது. இவர், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களான பிபிசி யுகே, ஸ்ரார் நெற்வேக் இந்தியா, ஃபொக்ஸ் மற்றும் வோர்நர் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். ஆசிய – பசுபிக் ஒலிபரப்பு அமைப்பின் செயற்படும் உறுப்பினராகவுள்ள இவர், ரேடியோ வேர்க்கங் பார்டியின் தலைவராக செயற்படுகிறார். ஊடகத்துறைக்குள் நுழைய முன்னர், இங்கிலாந்தில் பீ அன்ட் ஜீ, ரெக்கிற் னெட் கோல்மன் மற்றும் இந்தியாவில் பெப்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
அசோகா டயஸ் - எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் நிலையப் பணிப்பாளராகவுள்ளார்
தொடர்பு
MBC/ MTV Channels (Pvt) Limited
45/3, Braybrook Place, Colombo-02
Tel: +9411 2851371
Email: radio@sirasafm.maharaja.lk
Website: sirasa.com
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தகவல் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தகவல் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தகவல் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தகவல் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
சிரச எவ் எம் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வலைத்தளம் அந் நிறுவனத்தின் உரித்தாண்மை தொடர்பாக போதுமான தகவல்களை வழங்கவில்லை. இதனிடையே, இரண்டாம் நிலை மூலங்களும் இரு ஸ்தாபகர்களையும் இந்நிலையத்தின் உரித்தாண்மை தொடர்பாக விபரங்களையும் தெளிவுபடுத்துவதற்கு போதுமானதாக இல்லை. எனவே, பங்குதாரர்கள் பற்றிய விபரங்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. எம்ரிவி அலைவரிசை லிமிட்டட் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியன தொடர்பான மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கக் கூடியதாகவுள்ளன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக்குழு இக்கம்பனியின் தகவல்களை முறையாக கோரி 2018 யூலை 20 ஆம் திகதி கெப்பிட்டல் மகாராஜா லிமிட்டட் நிறுவனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.