உதயன்
1985 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட உதயன் நாளிதழ் இலங்கையின் வட மாகாண தமிழ்பேசும் மக்களின்தேவைகளைப் பூர்த்தி செய்தது. இப்பத்திரிகை இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தொடர்பான உள்ளுர் விவகாரங்கள் பற்றிய செய்திகளை வழங்கியது. அது நாட்டின் நடப்புப் பொது விவகாரங்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் உலகச் செய்திகள் ஆகிய விடயங்களில் செய்திகளை வழங்கியது. அதன் சகோதர பத்திரிகையான சுடரொளி 2018 இல் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. இப் பத்திரிகை ஈ .சரவணபவன் என்றும் குறிப்பிடப்படும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற (ITAK) உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனினால் புதிய உதயன் வெளியீட்டு (பிரைவேட்) லிமிட்டெட்டின் கீழ் தாபிக்கப்பட்டது. ஈ .சரவணபவன், அவரது மனைவி யசோதை சரவணபவன் மற்றும் மகள் லக்ஷ்மி சரவணபவன் ஆகியோர் இக்கம்பனியின் நடப்பு பணிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். இக் கம்பனியின் பங்குகள் குடும்பத்தினர் மத்தியில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. உதயன் கிட்டத்தட்ட 30 ஆண்டு ஆயுத மோதலின்போது யாழ்ப்பாணத்தில் தனது வெளியீட்டை நிறுத்திக்கொள்ளாத ஒரேயொரு பத்திரிகையாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தை நாட்டின் எஞ்சிய பாகங்களிலிருந்து தொடர்பறுத்து துண்டித்து, தடை மற்றும் வளங்களின்மை ஆகியன நிலவியபோதும் அது தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆயுத மோதல் நிலவிய சூழ்நிலையினுள் இவ் வெளியீட்டு நிறுவனம் அதன் பத்திரிகையாளர்கள் பல சந்தர்ப்பங்களில் கொலை, கடத்தல்கள், சித்திரவதை ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்படுவதை கண்ணுற்றது.
நுகர்வோர் வீதம்
1.79%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
கட்டணம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
நியூ உதயன் பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
தகவல் பொதுவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1985
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ஈ. சரவணபவன் என்றும் குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர். புதிய உதயன் வெளியீட்டு (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஸ்தாபகரும் தலைவருமாவார். ஆவர் தற்போது புதிய உதயன் வெளியீட்டு (பிறைவேட்) லிமிட்டெட்டில் 92.31 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். பாராளுமன்றத்தில் சரவணபவன் ஒழுக்கம் மற்றும் சிறப்புரிமைகள் மீதான பொறுப்புக்குழு, சுகாதாரம் மற்றும் மனித நலனோம்புகை மற்றும் சமூக வலுவூட்டல்மீதான பொறுப்புக் குழு பேண்தகு அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பாராளுமன்றத் தெரிகுழு ஆகியவற்றில் சம்பந்தப்பட்டுள்ளார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
யசோதரை சரவணபவன் - இவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் மனைவி. இவர் இந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்ரார். இவரின் கணவர் சரவணபவன் ராஜினாமாச் செய்ததன் பின்னர், 2012ம் ஆண்டு முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், நியூ உதயன் பப்ளிகேஷன்ஸ் (பிரைவெட்) லிமிட்டின் 7.69 வீத பங்குதாரராகவுள்ளார்
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
பத்திரிகையாசிரியர் முருகப்பா வல்லிபுரம் கானமயில்நாதன் உதயன் பத்திரிகை 1985 இல் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் தலைமை ஆசிரியர் பதவியை வகித்துள்ளார். 2016 டிசெம்பர் மாதம்வரை அவர் இக்கம்பனியின் ஒரு பணிப்பாளராகவும் பணியாற்றினார். கானமயில்நாதன் 2001 இல் உதயன் பத்திகையின் யாழ்ப்பாண அலுவலகம் தாக்கப்ட்டபோது அங்கிருந்த அதன் ஊழியர்களுள் ஒருவராவார். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குமிடையிலான ஆயுது மோதலின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக கானமயில்நாதன் அப்பத்திரிகை அலுவலகத்திலேயே வசித்ததாகக் கூறப்படுகிறது. உதயன் பத்திரிகையில் இணைவதற்கு முன்னர் அவர் ஈழநாடு, தினபதி மற்றும் வீரகேசரி குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகைகள் அடங்கலாக ஏறக்குறைய எல்லா பிரதான தமிழ் பத்திரிகைகளிலும் ஒரு நிருபராகப் பணியாற்றியுள்ளார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
பிரேமானந் தேவநாயகம் - (பத்திரிகைகளில் தேவநாயகம் பிரேமானந் என எழுதப்படும்) தற்போதைய உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியராகவுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய பற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்ததற்காக அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 2012ல் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
தொடர்பு
New Uthayan Publication (Pvt) Limited
No. 361, Kasthuriyar Road, Jaffna
General: +94 21 567 9944
Fax: +94 21 222 9944
Website: newuthayan.com
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
புதிய உதயன் வெளியீட்டு (பிரைவேட்) லிமிட்டெட்டிற்கு ஓர் உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை. உத்தியோகபூர்வ பத்திரிகை வலைத்தளப் பக்கம் அதன் தாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவனக் கட்டமைப்பு பற்றிய எவ்வித தகவல்களையும் வழங்குவதில்லை. ஆகையால், பகிரங்கமாகக் கிடைக்கும் இரண்டாம் நிலை மூலங்கள் மற்றும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்ஸ்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகியன உசாவப்பட்டன. கிடைக்கக்கூடியதாகவுள்ள மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டுக்குரியவையாகும். அவ்வப்போது ஒருசில தனிமனிதர்களின் பெயர்கள் எழுதப்படும் விதம் வேறுபட்டுக் காணப்படுகிறது. எடுத்துக் காட்டாக யசோதா சரவணபவன் அல்லது அதற்கு மாற்றீடாக யசோதை சரவணபவன் என்று எழுதப்படுகிறது. பங்குதாரர்கள்
பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெறப்பட்டன. கிடைக்கக் கூடிய மிக அண்மையத் தரவுகள் 2017 ஆம் ஆண்டிற்கானதாகும். 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 25 ஆம் திகதி புதிய உதயம் வெளியீட்டு (பிரைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.
ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்
புதிய உதயன் வெளியீட்டு (பிரைவேட்) லிமிட்டெட்டிற்கு ஓர் உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை. உத்தியோகபூர்வ பத்திரிகை வலைத்தளப் பக்கம் அதன் தாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவனக் கட்டமைப்பு பற்றிய எவ்வித தகவல்களையும் வழங்குவதில்லை. ஆகையால், பகிரங்கமாகக் கிடைக்கும் இரண்டாம் நிலை மூலங்கள் மற்றும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்ஸ்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகியன உசாவப்பட்டன. கிடைக்கக்கூடியதாகவுள்ள மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டுக்குரியவையாகும். அவ்வப்போது ஒருசில தனிமனிதர்களின் பெயர்கள் எழுதப்படும் விதம் வேறுபட்டுக் காணப்படுகிறது. எடுத்துக் காட்டாக யசோதா சரவணபவன்
அல்லது அதற்கு மாற்றீடாக யசோதை சரவணபவன் என்று எழுதப்படுகிறது. பங்குதாரர்கள்
பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெறப்பட்டன. கிடைக்கக் கூடிய மிக அண்மையத் தரவுகள் 2017 ஆம் ஆண்டிற்கானதாகும். 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 25 ஆம் திகதி புதிய உதயம் வெளியீட்டு (பிரைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.