This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/24 at 22:46
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

வீரகேசரி இணையத்தளம்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் இணையத்தள ஊடகமான வீரகேசரி .எல் கே ஆனது வீரகேசரி பத்திரிகையின் இணையதளப் பாதிப்பாகும் இது 2002 ல் உருவாக்கப்பட்டது. வீரகேசரி பத்திரிகையில் பிரசுரிக்கப்படும் விடயங்களை மீள் பிரசுரம் செய்கின்றது. அத்துடன், வீரகேசரி பத்திரிகையின் இணையத்தள பிரசுரம் சாந்தப்பணம் செலுத்துவதன் மூலம் பெறமுடிகின்றது. வீரகேசரி இணையத்தளம் பல்வேறு விடயங்களை பிரசுரிக்கின்றது, குறிப்பாக உள்நாட்டு விவகாரங்கள், அரசியல் செய்திகள், சர்வதேசச் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, மற்றும் தொழிநுட்பச் செய்திகளைப் பிரசுரிக்கின்றது. எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்டின் கீழ் கலைக்கேசரி, சுகவாழ்வு, வண்ண வானவில், மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சூரியகாந்தி, மற்றும் மித்திரன் ஆகிய வெளியீடுகளும் இணையத்தளத்தில் கிடைக்கின்றன.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

தரவுகள் கிடைக்கவில்லை

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

சர்வதேசம்

உள்ளடக்கத்தின் வகை

இலவசம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் (சிலோன) (பிரைவெட்) லிமிட்டட் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் அடங்கலாக 31 பங்குதாரர்களைக் கொண்டுள்ளது. அதிகளவான பங்குகள் செல்வநாதன் குடும்பத்திற்குச் (ஃபல்குறும் லிமிட்டட் மற்றும் நற்வெஸ்ற் நொமிநீஸ் லிமிட்டட் ஊடாக) சொந்தமானது. அத்துடன், சவுத் ஏசியன் இன்வெஸ்ற்மென்ற்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் ஊடாக கிருஷ்ணமூர்த்தி குடும்பம், நடேசன் குடும்பம் மற்றும் வின்சலாஸ் குடும்பங்கள் பங்குதாரராகவுள்ளநிலையில், சவுத் ஏசியன் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் ஊடாக ஞானம் குடும்பமும், கே.எம்.கே ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் கே.எம். காளியப்பா பிள்ளை அன்ட் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டட் ஊடாக சவுந்தரராஜன் குடும்பம் பங்குதாரராகவுள்ளது.

வாக்களிக்கும் உரிமை

பங்காளர்கள் மாத்திரம் வாக்குரிமை பெற்றவர்கள்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2002

நிறுவுனரின் ஈடுபாடுகள்

தமிழ் வீரகேசரி பத்திரிகையின் இணையமே வீரகேசரி.எல்கே. இது 1970 ம் ஆண்டு பத்திரிகை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் (பிரைவேட்) லிமிடெட்டின் கீழ் இந்த ஊடகம் வருகின்றது. இந்நிறுவனம் தற்போது தமிழில் பல பதிப்புக்களை வெளியிடுகின்றது. இந்நிறுவனம் வெளிநாடுகளில் டெய்லி எக்ஸ்பிரஸ் மற்றும் வீக்லி எக்ஸ்பிரஸ் என இரண்டு ஆங்கில மற்றும் தமிழ் டைம்ஸ் என்ற தமிழ்ப் பத்திரிகைகளையும் வெளியிடுகின்றது. மொத்தமாக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் நிறுவனம் 16 பதிப்புக்களை வெளியிடுகின்றது.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

முருகேசு செந்தில்நாதன் - இவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியுயர்வு பெற முன்னர், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டடின் வியாபார அபிவிருத்தி முகாமையாளராக செயற்பட்டார். இவருக்கு, மத்திய மாகாணக் கல்வி அமைச்சினால் 'சாகித்யா' (இலக்கிய) விருது வழங்கப்பட்டது.
இவர் பிரித்தானிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வியாபார முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டத்தை பெற்றதுடன் வியாபாரத்துறையில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர். இவர் ஒரு சமாதான நீதவான்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

எஸ். ஸ்ரீகஜன் - வீரகேசரி தினப்பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியராக செயற்படுகின்றார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும், செயலளராகவும் பொருளாளராகவும் செயற்பட்டுள்ளார்

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

குமார் நடேசன் என அறியப்படும் சிவகுமார் நடேசன் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் (சிலோன்) (பிரைவெட்) லிமிட்டட் ஆகியவற்றின் பணிப்பாளராகவுள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தற்போதைய தலைவராகவுள்ளதுடன் இவர் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராகவும் உள்ளார். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் (சிலோன்) (பிரைவெட்) லிமிடெட்டின் 11.1 வீத பங்குகளையும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிடெட்டின் ஒரு பங்கையும் வைத்துள்ளார்.

தொடர்பு

Express Newspapers (Ceylon) (Pvt) Limited

No. 185, Grandpass Road, Colombo 14

Tel: +94 011 732 2700, +94 011 732 2777

Website: www.virakesari.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

வீரகேசரி. எல் கே மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பன இவற்றின் உருவாக்குனர்கள் பணிப்பாளர்கள் மற்றும் நிறுவன அமைப்பு பற்றிய தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. அதனால் இரண்டாம்தர தகவள்மூலங்கள் மற்றும் நிறுவன பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான அறிக்கை என்பனவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. MOM ஆராச்சிக் குழுவினர் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தை 20 ஜூலை 2018 அன்று முறையாக தகவல்கள் பெறும் முகமாக அணுகியது. நிறுவனம் பதிலளித்தது.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ