This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/28 at 14:20
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

வை எவ் எம்

வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் துணை நிறுவனமான எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் இளையோர் சேவையாக வை எவ் எம் வானொலிச் சேவையாகும். இது தமிழ் மற்றும் சிங்கள மொழிச் சேவை இயங்குகின்றது. சிரச எவ் எம் இதன் சிங்கள சேவையாகும் இதன் சகோதர வானொலிகளாக சக்தி எவ் எம் தமிழ் சேவையாகும். ஆங்கிலத்தில் ஜெஸ் எவ் எம் மற்றும் லெஜெண்ட்ஸ் எவ் எம் என்பன கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

3.7%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசிய

உள்ளடக்கத்தின் வகை

இலவச ஒலிபரப்பு

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

வை எவ் எம், எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடினால் நிர்வகிக்கப்படுகின்றது. சிரச எவ் எம் தமது துணை நிறுவனமென எம் பி சி தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. கப்பிட்டல் மஹாராஜா கூட்டமைப்பு நிறுவனத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள இரண்டு நிறுவனங்களான கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் 94 .56 வீத பங்குகளையும் விஷன் லங்கா (பிரைவெட்) லிமிட்டட் 5 .43 வீத பங்குகளையும் மொத்தமாக 18 ,389 ,510 பங்குகளைத் தம்வசம் கொண்டுள்ளன. இதேவேளை கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் விஷன் லங்கா (பிரைவெட்) லிமிட்டடின் 28 .6 வீத பங்குகளைக் கொண்டுள்ளன. கப்பிட்டல் மஹாராஜா கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவரான ஆர். ராஜமஹேந்திரன் கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் 79 .95 வீத பங்குகளைக் கொண்டுள்ள அதேவேளை அவரின் மகன் சசிதரன் ராஜமஹேந்திரன் 20 .05 பங்குகளைக் கொண்டுள்ளார்.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2005

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ராஜேந்திரம் மகாராஜா மற்றும் ராஜேந்திரம் ராஜ மகேந்திரன் ஆகியோர் சிரச டிவி யின் ஸ்தாபகர்களும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன ஸ்தாபகர்களுள் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகன்களுமாவர். ராஜேந்திரம் மகாராஜா 'வட்டி' என்ற சொந்த இலச்சினையைக் கொண்ட ஒரு தொழில்முயற்சியாளரும் ஹில்ட்டன் ஓட்டலின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியவருமான பத்மா மகாராஜாவை மணமுடித்தார். அவர் 2016 ஆம் ஆண்டில் காலமானார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் கனிஸ் ராஜேந்திரத்தை மணமுடித்தார். அவர் இந்நிறுவனத்தின் கீழ்வரும் ஒரு கம்பனியான ரியுமஸ் சலூனின் ஊநுழு ஆவர். இவ் இரு சகோதரர்களும் இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்ற அதேவேளை ராஜேந்திரம் மகேந்திரராஜா காலப்போக்கில் ஓய்வு பெற்றார். 2018 இல் ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகன் சசீந்திரன் ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையே, ராஜமகேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். ராஜேந்திரம்; மகாராஜா மற்றும் பத்மா மகேந்திரன் தம்பதிகளின் மகனாகிய பிரதீப் மகாராஜாவும் இந்நிறுவனத்தில் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். 2015 இல் பிரதீப் மகாராஜா இலங்கை மேர்சண்ட் வங்கியின் (MBSL) பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

லக்ஷ்மி ஜயசிங்க தற்போதைய எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், இதற்கு முன்னர், வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தகவல் மற்றும் வியாபாரத் துறையின் பணிப்பாளராகவும், எம்ரிவி எம்பிசி நிறுவனங்களின் விற்பனைப் பணிப்பாளராகவும், முகாமையாளராகவும், ஓ எல் ஈ ஸ்பிரிங் பொட்லெர்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் முக்கிய கணக்கு மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

சாந்தி பகிரதன் எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் குழுப் பணிப்பாளராகவுள்ளதுடன் ஸ்ரெய்ன் கலையகத்தின் தலைவராகவும் உள்ளார். இவ்விரு நிறுவனங்களும் வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக மகாராஜா நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவிக்கிறது. இவர், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களான பிபிசி யுகே, ஸ்ரார் நெற்வேக் இந்தியா, ஃபொக்ஸ் மற்றும் வோர்நர் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். ஆசிய – பசுபிக் ஒலிபரப்பு அமைப்பின் செயற்படும் உறுப்பினராகவுள்ள இவர், ரேடியோ வேர்க்கங் பார்டியின் தலைவராக செயற்படுகிறார். ஊடகத்துறைக்குள் நுழைய முன்னர், இங்கிலாந்தில் பீ அன்ட் ஜீ, ரெக்கிற் னெட் கோல்மன் மற்றும் இந்தியாவில் பெப்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

தொடர்பு

MBC/ MTV Channels (Pvt) Limited

45/3, Braybrook Place, Colombo-02

Tel: +94 77 274 4943

E-mail: yfm@mbc.maharaja.lk

Website: yfm.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

வை எவ் எம் மற்றும் எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் ஸ்தாபகர் பற்றியோ நிறுவன அமைப்பு பற்றியோ தகவல்கள் எதனையும் பதிவிடவில்லை. பதிலாக நிகழ்ச்சி நிரல் மற்றும் தொடர்பு கொள்ளும் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும் இதன் தாய் நிறுவனமான வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மஹாராஜா கூட்டமைப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் குழு பற்றிய விபரங்கள் பதியப்பட்டுள்ளன. இதன்
காரணத்தினால் MOM ஆராய்ச்சிக் குழுவானது இரண்டாம்நிலை ஆதாரங்களைக் கொண்டு தரவுகளை சேகரிக்க முனைந்தபோதும் மிகக் குறைவான தரவுகளையே பெறமுடிந்தது. அதேபோல் நிறுவனத்தில் பணியாற்றும் ஏனைய முக்கிய நபர்களின் ஏனைய ஈடுபாடுகள் தொடர்பான விபரங்கள் மிகக் குறைவாக கிடைத்தபோதும் நிறுவனமானது அவர்கள் தொடர்ந்தும் அதே பணியில் இருப்பார்கள் என உறுதிப்படுத்தியது. நிறுவனத்தின் தலைவரான ராஜேந்திரன் ராஜமகேந்திரன் (R.ராஜமகேந்திரன் மற்றும் கிளி மகேந்திரன் எனவும்அறியப்படுபவர்) இவரின் பெயர் பல்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளது. நிறுவனப் பங்குதாரர்கள் பற்றிய தகவல்கள் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கப்பெற்ற ஆண்டு வருமான அறிக்கையிலிருந்து பெறப்பட்டன. அண்மைய பதிவாக 2017 ம் ஆண்டாக காணப்படுகின்றது. நேயர் தரவு வீதம் இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தால் 2017ம் ஆண்டு தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் இருந்து பெறப்பட்டது . ஜுலை மாதம் 20ம் திகதி 2018 அன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர், கப்பிட்டல் மஹாராஜா கூட்டமைப்பு நிறுவனத்தை அணுகிய நிலையிலும் அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ