குழுவினர்
ஊடக உரிமையாண்மைக் கண்காணிப்பினை (MOM ) ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த இணை நிறுவனம் கிடைப்பது முக்கியமான விடயமாகும்.
வெரிடே ரிசர்ச் இனால் ஒழுங்கமைக்கப்பட்ட உள்நாட்டு குழுவினரின் அர்ப்பணிப்பும், அவர்கள் காண்பித்த கடமையுணர்ச்சியுமே இவ் ஆராய்ச்சியினை முழுமையடையச் செய்தது
MOM Team
ஓலாஃப் ஸ்டீன்ஃபட், உலகளாவிய திட்டப் பணிப்பாளர்
ஓலாஃப், பத்திரிக்கையாளர் சுதந்திர கண்காணிப்பு அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பில் (RSF), "ஊடக உரிமையாண்மை கண்காணிப்பு (MOM)" திட்டத்திற்கும், "ஊடக நம்பிக்கை முயற்சி"க்கும் (Journalism Trust Initiative) தலைமை தாங்குகிறார்.
பல ஆண்டுகளாக, இவர் ஊடக முன்னேற்ற ஒத்துழைப்பில் ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் ஈடுபட்டுள்ளார். சர்வதேச அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அழைப்புக்கள் அவரை முதன்மையாக தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் அரபு உலகிற்கு ஈர்த்தன.
இவர், முன்னர் தேசிய ஜேர்மனிய பொது ஒளிபரப்பு நிறுவனங்களான ARD மற்றும் ZDF ஆகியவற்றில் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், புலனாய்வு நிருபராகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிருபராகவும் பணியாரடியதுடன் வடிவமைப்பு மற்றும் பெருநிறுவன தகவல்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்களில் பணியாற்றினார்.
ஓலாஃப் ஐரோப்பிய ஆணைகுழுவின் "போலி செய்திகள் மற்றும் ஒன்லைன் தவறான தகவல்களுக்கான உயர்நிலை நிபுணர் குழு" மற்றும் ஐரோப்பிய கவுன்சிலில் உள்ள "டிஜிட்டல் யுகத்தில் பத்திரிக்கையின் தரம் குறித்த நிபுணர்கள் குழு" ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். இவர் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் அடிக்கடி கற்பிக்கிறார்.
நஃபிஸா ஹஸனோவா, திட்ட முகாமையாளர் RSF
MOM இலங்கையின் திட்ட முகாமையாளரான நஃபிசா இதற்கு முன்னர் MOM உக்ரைன் (2016), MOM Serbia (2017) மற்றும் MOM அல்பேனியா (2018) ஆகியவற்றை RSFக்காக நிர்வகித்துள்ளார். RSF இல் இணைவதற்கு முன்பனர் நஃபிசா, Finnish Crisis Management Initiative (CMI) Martti Ahtisaari மையத்திற்கான Transdniestrian தீர்வு செயல்முறையில் பணியாற்றினார். 2012 முதல் 2014 வரை இவர் கிழக்கு ஐரோப்பா, காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவின் கொள்கை அதிகாரியாக APRODEV இல் பணியாற்றினார், இப்போது பிரஸ்ஸல்ஸில் உள்ள ACT அலையன்ஸ் EU பணியாற்றுகின்றார் . 2008-2012 இல், பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய கொள்கை ஆய்வுகளுக்கான மையத்தில் (CEPS மற்றும் FRIDE) EUCAM (EU மத்திய ஆசிய கண்காணிப்பு) திட்ட முகாமையாளராக நஃபிசா பணியாற்றினார். நஃபிசா, ஜேர்மனியின் ஃபுல்டாவில் உள்ள அப்ளைட் ஸ்டடீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் சார்ந்த தொடர்பாடல் மற்றும் ஐரோப்பிய ஆய்வுகளில் எம்.ஏ. மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் சர்வதேச மொழிகளுக்கான அரச நிறுவனத்தில் ஆங்கில மெய்யியலில் பிஏ முடித்தார்.
தீபாஞ்சலி அபேவர்தன, தலைவர்-ஊடகம், வெரிட்டே ரிசர்ச்
தீபாஞ்சலி ஊடக நெறிமுறைகள், ஊடக நடத்தை மற்றும் ஊடகங்கள் மற்றும் பெண்கள் ஆகியவற்றில் விரிவான அனுபவம் கொண்டவர். இவர் ஊடக நெறிமுறைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வழங்குகின்றார். மற்றும் வெளிநாட்டில் ஊடக ஆய்வுகள் குறித்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன், இவர் நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்புகளின் மூலம் சர்ச்சைகள்-தீர்வு மற்றும் மனித உரிமைகளில் அனுபவம் பெற்றவர். தீபாஞ்சலி, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் BA பட்டமும், இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தெற்காசியக் கற்கைகளில் MA பட்டமும் பெற்றார், அங்கு மதன்ஜீத் சிங் புலமைப்பரிசில் MA கற்கையை மேற்கொண்ட முதல் இரண்டு இலங்கையர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீபாஞ்சலி, இலங்கை ஊடகங்கள், ஊடக உரிமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் பரந்த அளவிலான உள்ளூர் மற்றும் சர்வதேச மற்றும் ஊடக பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
ஸ்டெபனி நிக்கோல், முதன்மை ஆய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
ஸ்டெபனி தற்போது வெரிட்டே ரிசர்ச்சில் ஊடகக் குழுவில் பணியாற்றி வருகின்றார். இவர் இலங்கையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் மற்றும் சமூகவியலில் ஆங்கிலம் மற்றும் சிறார்கள் தொடர்பில் BA பட்டம் (கௌரவ) பெற்றார். வெரிட்டே ரிசர்ச்சில் இணைவதற்கு முன்னர், அவர் ஜேர்மனியில் உள்ள சர்வதேச ஆங்கில கார்பஸ் - இலங்கை இல் பணிபுரிந்தார். முன்னர் ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்புகளில் பணிபுரிந்த ஸ்டெபனி, அரசியல், மோதல்கள் மற்றும் கலாச்சார ஆய்வுகள் உட்பட பலவிதமான ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும் எதிர்காலத்தில் இந்தப் பகுதிகளில் ஈடுபடுவதாக நம்புகிறார்.
ஷமானா அம்ஜா, ஆராய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
ஷமானா தற்போது வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தில் ஆராய்ச்சி நிர்வாகியாக இணைக்கப்பட்டுள்ளார். அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இரண்டாம் வகுப்பில் LLB பட்டம் பெற்றவர். மேலும் அவர் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை சட்டக் கல்லூரியில் தனது சட்டத்தரணி படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இவர் ஆய்வு மற்றும் சமூக சேவைத் துறையில் பல்வேறு தன்னார்வத் திட்டங்களில் பணியாற்றியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் சட்டம், உலக ஒழுங்கு, பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச/பிராந்திய அமைப்புகளுடன் தொடர்புடைய விஷயங்களில் ஷமானா மிகவும் ஆர்வமாக உள்ளார்.
எட்வேட் உதயதாஸ், ஆய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
எட்வேட் ஆதவன் நியூஸில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். இவர் வெரிடே ரிசர்ச்சின் ஊடகக் குழுவில் இணைந்துள்ளார் அத்துடன், ஆதவன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
றொஷேல் கனகசபை, ஆய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
றொஷேல் தற்போது வெரிட்டே ரிசர்ச்சின் மீடியா குழுவில் இணைந்துள்ளார். அதே சமயம் அவர் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் அமைதி தொடர்பான ஆய்வுகளில் MA படிப்பைத் தொடர்கிறார். பல்கேரியாவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் நாகரிகத்தில் பட்டம் பெற்ற றொஷேல், அரசியல், அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகளில் BA பட்டம் பெற்றார். வெரிட்டே ரிசர்ச்சில் சேர்வதற்கு முன்பு, இவர் ஆய்வு, முகாமைத்துவம் மற்றும் சமூக சேவைத் துறையில் பல்வேறு உள்ளாக பணியாளராகவும் தன்னார்வலராகப் பணியாற்றியுள்ளார். மோதல் மற்றும் அமைதி ஆய்வுகள், அணு ஆயுதக் குறைப்பு, அகதிகள் மற்றும் ஒழுங்கற்ற இடம்பெயர்வு, 1900களில் இருந்து அரசியல் வரலாறு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐரோப்பிய ஒன்றியம் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) போன்ற சர்வதேச/பிராந்திய அமைப்புகளுடன் தொடர்புடைய விடயங்களில் றொஷேல் மிகவும் ஆர்வமாக உள்ளார்.
மஹோஷதி பீரிஸ், ஆய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
மஹோஷதி தற்போது வெரிட்டே ரிசர்ச்சின் மீடியா குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் (மேல்) பிரிவில் சட்டதுறையில் LLB பட்டம் பெற்றார். மேலும் அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் தனது சட்டத்தரணியாவதற்கான படிப்பை மேற்கொள்ளாத் திட்டமிட்டுள்ளார். வெரிட்டே ரிசர்ச்சில் இணைவதற்கு முன்பு, இவர் சட்ட மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பல்வேறு உள்ளக பயிற்சி மற்றும் நிறுவன நிலைகளில் பணியாற்றியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் சட்டம், உலக ஒழுங்கு, பாதுகாப்பு ஆய்வுகள், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் பரந்த நோக்கங்களில் மஹோஷதி மிகவும் ஆர்வமாக உள்ளார்.
வினுஷா போல்ராஜ், ஆய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
வினுஷா வெரிட்டே ரிசர்ச்சில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார். அவர் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகளில் MA பட்டம் பெற்றதுடன் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் BA பட்டம் பெற்றவர். அவர் முன்பு ஒரு ஊடகவியலாளராகப் பணிபுரிந்தார் மற்றும் பல்வேறு தகவல்தொடர்பு தொடர்பான பாத்திரங்களில் பணியாற்றினார். வினுஷா பின்காலனித்துவ அரசியல், இணைய பாதுகாப்பு மற்றும் ஆயுதமயமாக்கல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.
தயான் சுரேந்திரநாதன், ஆய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
தயான் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குவெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள், தரவு அறிவியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் BA&Sc கற்கையினை முடித்தார். இவர் கோடைகால பயிற்சிக்காக வெரிட்டே ரிசர்ச்சில் பணிபுரிந்தார். தயான் இதற்கு முன்னர் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் நிலைமாறுகால நீதி போன்ற தலைப்புகளில் பணியாற்றியுள்ளார்.
லஹரி ஜயதிலக்க, ஆய்வாளர், வெரிட்டே ரிசர்ச்
லஹரி தனது லண்டன் உயர்தரத்தை ஜூலை 2018 இல் முடித்த பின்னர், வெரிட்டே ரிசர்ச்சில் பயிற்சியாளராக சேர்ந்தார். அவர் ஆங்கில இலக்கியம், பொருளாதாரம் மற்றும் உளவியல் ஆகியவற்றைக் கற்றதுடன், ஆங்கில இலக்கியத்தில் தனது உயர்கல்வியைத் தொடர திட்டமிட்டுள்ளார்.
வித்யா நத்தானியேல், சட்டக் குழு, MOM இலங்கை, வெரிட்டே ரிசர்ச்
அவரது கல்விப் பின்னணி சட்டத்தில் துறையாக இருக்கும்போது, வித்யா கட்டணமில்லாத தடைகள், வர்த்தக வசதி, பட்ஜெட் பகுப்பாய்வு மற்றும் போட்டி தொடர்பான தலைப்புகள் போன்ற பல பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றி வருகின்றார். இவர் தனியார் துறை வணிகக் கழகங்கள், பிராந்திய வணிகக் கழகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கையில் மிகவும் திறந்த மற்றும் வெளிப்படையான கொள்கைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். நில உரிமைகள், தகவல் அறியும் உரிமை, மருந்துக் கொள்கை, ஊடக உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் போன்றவற்றுடன் தொடர்புடைய வளர்ச்சித் துறையின் பல்வேறு திட்டங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் இயந்திரமயப்படுத்தப்பட்ட அடிமட்ட இழுவை மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினையில் அவர் மேற்கொண்ட ஆய்வானது தேசிய பிரச்சாரத்திற்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து இலங்கையில் இழுவை மீன்பிடித்தலைத் தடை செய்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வித்யா தனது இலங்கை சட்டத்தரணிப் பரீட்சைகளையும் முடித்துள்ளதுடன், அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட வழக்குகள் தொடர்பாக மூத்த சட்டத்தரணி விரான் கொரியாவிடம் ஜூனியர் ஆலோசகராக பகுதி நேரமாகப் பணியாற்றியுள்ளார். இவர் 2011 இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் LLB பட்டத்தைப் பெற்றார் அத்துடன், முழு நிதியுதவியுடன் கொமன்வெல்த் பகிரப்பட்ட உதவித்தொகையைப் பெற்று, வார்விக் பல்கலைக்கழகத்தில் சர்வதேச முகாமைத்துவச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் LLM முடித்தார்.
விரான் கொரியா, ஆலோசகர் சட்டக் குழு MOM இலங்கை, வெரிட்டே ரிசர்ச்
விரான், இலங்கையில் (வழக்கு செய்பவராக) இரண்டு தசாப்த கால அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞர் ஆவார். தனியார் சட்டத்தரணிகள் சங்கத்திற்குத் திரும்புவதற்கு முன்னர், அவர் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக பல வருடங்கள் பணியாற்றினார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் LL.B மற்றும் LL.M பட்டங்களை பெற்றுள்ளார்.
பல ஆண்டுகளாக, இவர் தேசிய மற்றும் பொது முக்கியத்துவம் மற்றும் ஆர்வமுள்ள முக்கிய வழக்குகளில் பல தரப்பினருக்கு (அரசு மற்றும் தனியார்) வழக்கறிஞராகத் தோன்றியுள்ளார். ஊடக ஒழுங்குமுறை மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான இலங்கையின் முக்கிய வழக்குகள் இதில் அடங்கும்.
வெரிட்டே ரிசர்ச்சின் சட்ட ஆலோசகராகவும் உள்ள அவர், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
சுபுன் ஜயவர்தன, சட்டக் குழு, MOM இலங்கை, வெரிட்டே ரிசர்ச்.
Verité Research
வெரிட்டே ரிசர்ச் ஆசியாவிற்கான மூலோபாய பகுப்பாய்வை வழங்கும் ஒரு தனியார் ஆய்வு நிறுவனம் ஆகும். இது பொருளாதாரம், அரசியல், சட்டம் மற்றும் ஊடகம் என்பன இதன் முக்கிய ஆராய்ச்சி பிரிவுகளாகும். இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள வெரிட்டே ரிசர்ச், ஐக்கிய நாடுகள் சபை, பலதரப்பு முகவர் நிலையங்கள், இராஜதந்திர பணியகங்கள், அரசாங்கத் துறைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்காக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. வெரிட்டேயின் பொருளாதாரம், சட்டம், அரசியல் மற்றும் ஊடகக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவ் இருங்கிணைந்த செயற்பாடின்மூலம், இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தனித்துவமான மற்றும் முழுமையான புரிதலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதிக்கிறது. வெரிட்டேயின் ஊழியர்கள் பல்வேறு துறைகளின் அனுபவத்துடன் பல்வேறு நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கின்றனர். எங்கள் முழுநேர ஊழியர்களுக்கு மேலாக, வெரிட்டே மூத்த ஆலோசகர்கள் மற்றும் துணை நிலைப் பணியாளர்களையும் உள்ளடக்கியுள்ளது, அவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை முன்னெடுக்கின்றார்கள்.
Reporters Without Borders
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporter Sans Frontières, RSF) நான்கு ஊடகவியலாளர்களால் 1985 பிரான்ஸிலுள்ள Montpellier இல் நிறுவப்பட்டது. இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக பிரான்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோவில் ஆலோசகர் அந்தஸ்தையும் கொண்டுள்ளது. RSF ஊடக சுதந்திரத்திற்காக வாதிடுகிறது, சுதந்திரமான ஊடகத்தை ஆதரிப்பதுடன் உலகளவில் ஆபத்தை எதிகொள்ளும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கிறது. அதன் பணிகள்:
• உலகளவில் தகவல் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து கண்காணிக்க;
• ஊடகங்களில் இதுபோன்ற தாக்குதல்களை கண்டிக்க;
• தகவல் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தணிக்கை மற்றும் சட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுதல்;
• துன்புறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தார்மீக ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உதவுதல்.
• போர்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த பொருள் உதவி வழங்குதல்.
1994 முதல், ஜேர்மனியப் பிரிவு பேர்லினில் செயற்படுகின்றது. உலகளவில் ஊடக சுதந்திரத்தை ஆய்வு செய்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் ஜேர்மனியப் பிரிவு பரிஸில் உள்ள சர்வதேச செயலகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றினாலும், அது நிறுவன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் சுயாதீனமாக உள்ளது. அத்துடன், ஊடக உரிமை கண்காணிப்பு திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக - பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய ஜேர்மனிய அமைச்சகத்தில் மானியத்திற்கு விண்ணப்பித்துள்ளது.
Global Media Registry
குளோபல் மீடியா ரெஜிஸ்ட்ரி (GMR), உலகெங்கிலும் உள்ள ஊடக நிறுவனங்களின் தரவுத்தொகுப்புகள் மற்றும் சூழல் சார்ந்த - பொதுவில் கிடைக்கக்கூடிய அல்லது சுயமாக அறிக்கையிடும் - தகவல்களைச் சேகரித்து, தொகுத்து வழங்குகிறது.
அவ்வாறு செய்வதன் மூலம், தகவல் வெளியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதே நோக்கமாகும். எனவே, GMR அனைத்து தரப்பினர்களுக்கும் சிறந்த தேர்வுகள் மற்றும் முடிவெடுக்க படிமுறை ரீதியாக உதவுகிறது. இதில் ஒவ்வொரு குடிமகன் மற்றும் நுகர்வோர், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள், அத்துடன் தனியார் துறை - எடுத்துக்காட்டாக விளம்பரதாரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் (a. k. a. தளங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்) அடங்குவர்.
இந்த பொதுச் சேவையை ஒரு சமூக நிறுவனமாக வழங்குவதன் மூலம், குளோபல் மீடியா ரெஜிஸ்ட்ரி, தகவல் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பெருமளவில் மேம்படுத்துவதற்குப் பங்களிக்கிறது.
இது ஊடகக் கண்காணிப்பு திட்டத்தில் இருந்து தனியாக நிறுவப்பட்டது, இது இப்போது ஜேர்மனியச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற LLC ஆக செயல்படுகிறது.