சந்தர்ப்பம்
பொதுமக்கள் கருத்தின்மீது எந்த ஊடக நிறுவனம் வலிமையான செல்வாக்கு செலுத்தும் என்பதை இலங்கைச் சமூகத்தின் அம்சங்கள் தீர்மானிக்கின்றன. சமூகத்தின் அந்த அம்சங்கள் தென்னாசியாவில் மிக உயர்ந்த எழுத்தறிவு மட்டத்தைக் கொண்டுள்ள பிரிவிலிருந்து மூன்று தசாபதகால ஆயுத மோதலின் விளைவாக ஏற்பட்ட மொழிவழி இனப் பிளவுவரை வேறுபட்டு அமைந்துள்ளன. மொழிசார்ந்த இவ்வேற்றுமையானது, அரசியல்ரீதியாக உணர்வுபூர்வ விடயங்கள்பற்றி சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்கள் எவ்வாறு அறிக்கையிட்டுள்ளன என்பதில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியல் சிந்தனைப்போக்கு நாட்டில் ஊடக செய்திப்பரப்புதலை கணிசமாக உருவமைக்கிறது. அரசுக்குச் சொந்தமான ஊடாகங்களுக்கு அப்பால், தானியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்கள்கூட அரசியல் செல்வாக்கிலிருந்து முழுமையாக விடுபட்டு சுயேச்சையானதாக எப்போதும் இருப்பதில்லை.
பல தசாப்தகால ஊடக அடக்குமுறையைத் தொடர்ந்து அண்மைக்காலங்களில் இலங்கையில் ஊடக சுதந்திரம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில தரப்புகளில் ஊடக உரித்தாண்மை செறிந்து கிடப்பது இலங்கையின் ஊடக சுதந்திரத்தைத் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. நாட்டில் நிலவும் தற்போதைய சட்ட மற்றும் கொள்கை வரைச்சட்டகம் இச் சவாலுக்குப் போதுமானளவு பதிற்செயற்பாடாற்றவில்லை.
பொருளாதாரரீதியாக, அரச மற்றும் தனியார் விளம்பரம் ஊடக நிறுவனங்களுக்கான பிரதான வருமான மூலமாக தொடர்ந்து நிலவி வருகிறது. இவ்வித சார்ந்திருத்தலும் ஊடக சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.