டெய்லி நியூஸ் இணையத்தளம்
டெய்லி நியூஸ்.எல் கே பத்திரிகையின் இணையதளப் பாதிப்பாகும் இது 1995 ல் உருவாக்கப்பட்ட பத்திரிக்கையோடு இணையதளப் பத்திரிக்கையும் வெளியிடும் இலங்கையின் முதல் இணையத்தளமாகும். ஆங்கில மொழி இணையத்தளமானது பத்திரிகையின் மீள் பிரசுரமாகும். இப் பத்திரிகையானது பகுதியளவில் அரசாங்க நிறுவனமான அசோசிட்டேட் நியூஸ்பெபேர்ஸ் சிலோன் லிமிடெட்டினால் பிரசுரிக்கப்படுகின்றது.
நுகர்வோர் வீதம்
தரவுகள் கிடைக்கவில்லை
உரிமையாண்மையின் வகை
அரசுக்குச் சொந்தமானது
பிராந்திய உள்ளடக்கம்
சர்வதேசம்
உள்ளடக்கத்தின் வகை
இலவசம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டட் (லேக் ஹவுஸ்)
உரிமையாண்மைக் கட்டமைப்பு
டெய்லி நியூஸ். எல் கே ஹவுஸ் என்றும் அறியப்படும் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனமான
எஸ்சோசியேட்டட நியூஸ்பேப்பரஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டினால் நிர்வகிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லேக் ஹவுஸ் டீ.ஆர். விஜேவர்தனவினால் தாபிக்கப்பட்டு 7 பத்திரிகைகளைக் கொண்டிருந்தது. 1956 இல் அவரது இறப்பின் பின்னர், பத்திரிகையசிரியர் கொள்கைகள் அவரது மருமகனான எஸ்மண்ட் விக்கிரமசிங்கவினால் மேற்பார்வை செய்யப்பட்டன. 1973 இல், சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் 28 ஆம் இலக்க எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்கீழ் அக் கம்பனியை தேசியமயமாக்கியது. ஏ.கே.பிரேமதாச அதன் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது 99 பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களுள் பொது நம்பிபக்கைப் பொறுப்பாளர் திணைக்களம், 10 நிறுவனங்கள் மற்றும் 88 தனி மனதர்கள் அடங்கும். இவ் 88 தனிமனிhர்களுள் 0.௧௯ வீத பங்குகளைக் கொண்டிருக்கும் தற்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அடங்கலாக ANCL இன் ஸ்தாபகருக்கு உறவினர்களான பல உறுப்பிப்னர்கள் அடங்குவர். அதி கூடிய எண்ணிக்கையிலான பங்குகளை இலங்கை அசாங்கத்தின் சார்பில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் கொண்டிருக்கிறது. பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகார எல்லையினுள் வருகின்றது.
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
தனி உரிமையாளர்
குழுமம் / தனி உரிமையாளர்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 1961 ம் ஆண்டு 28 ம் இலக்க சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. இது இலங்கையின் தேசிய எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமாக உள்ளது.
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம்
இலங்கை வரையறுக்கப்பட்ட கப்பல் கூட்டுத்தாபனம் 1971ம் ஆண்டு 11ம் இலக்கக் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும், 1992ல் தான் அரசாங்கத்தின் முழு உடைமையானது.
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1995
நிறுவுனரின் ஈடுபாடுகள்
டெய்லி நியூஸ் இணையத்தளம் அரசாங்கத்தினால் உரிமை கொள்ளப்பட்ட அமைப்பான, அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (ANCL அல்லது லேக் ஹவுஸ்) நிறுவனத்துக்கு சொந்தமானவையாகும். டெய்லி நியூஸ், ரெச, தினமின தினகரன் என்பன இதன் தினசரி பத்திரிகைகள். சன்டே ஒப்சேவர், சிலுமின, வார மஞ்சரி என்பன ஞாயிறு பாதிப்புகள் என தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பத்திரிகைகளை பிரசுரிக்கின்றது. டி.ஆர்.விஜேவர்த்தன அவர்களினால் தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. 1973 ஆம்
ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ்
சிலோன் (சிறப்பு விதிகள்) சட்டம் இல. 28 இன் மூலம் தேசியமயமாக்கப்பட்டது. 87.56 வீதமான இந்நிறுவனத்தின் பங்குகள் அரசாங்கத்தின் சார்பாக பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் வசம் உள்ளது
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
கிரிஷாந்த பிரசாத் கூரே - அசோசிட்டேட் நியூஸ்பெபேர்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர். கப்பிடல் மகாராஜா நிறுவனத்தில் நிறைவேற்று அதிகார பதவி வகித்து, நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை மேற்பார்வை செய்தார். ரிச்சட் பீரிஸ் குழுமத்தின் கீழ் ரிவிர மீடியா கோபெரேஷன் பிரைவேட் லிமிடேட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியதுடன், அதன் ஸ்தாபக பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பநோயற்றியுள்ளார். த நேஷன் மற்றும் ரிவிர என்பன இவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டவை. இருந்தபோதும் ரிவிர, இதன் ஆங்கில பதிப்பாகிய த நேஷன் ஐ 2017 ல் நிறுத்திக்கொண்டது.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
அபாயா அமரதாச பொது முகாமையாளராக பணியாற்றுகின்றார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
பிரபுத்த அத்துகோரல டிஜிட்டல் ஊடக முகாமையாளராக உள்ளார்.
தொடர்பு
Associated Newspapers of Ceylon Limited
No. 35, D.R. Wijewardena Mawatha, Colombo 10
General: +9411 2 429 429, +9411 2 421 181, +9411 2 331 181
Email: dailynewsonline@lakehouse.lk
Website: www.dailynews.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
நிறுவன முகாமைத்துவ அமைப்பு பற்றிய தகவல்கள் இரண்டாம்தர தகவல்மூலங்கள் மூலமும் நேரடியாக நிறுவனத்தை தொடர்புகொண்டதன் மூலமும் பெறப்பட்டன. நிறுவனப் பங்காளர்கள் பற்றிய தகவல்கள் நிறுவன பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான அறிக்கை என்பனவற்றிலிருந்து பெறப்பட்டன.