தொழில்நுட்பம்
இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழிலநுட்பக் (ICT) கொள்கை நாட்டிற்கான ICT வழிகாட்டு வரைபடமொன்றை விருத்தி செய்யும் பணி வழங்கப்பட்டுள்ள ஈ- ஸ்ரீலங்கா கருத்திட்டத்திலிருந்து (2003) தோன்றுகிறது. அது, 2003 இல் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இதில் சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பாவனைiயை வலியுறுத்தும் 'உள்நாட்டு மொழிகள் முன்னெடுப்பு' மற்றும் அரசாங்க தரவுகளை மேலும் கூடிய அளவில் பகிரங்கமாக கிடைக்ககூடியதாக்கும் 'இலங்கை திறந்த தரவு முன்னெடுப்பு' முதலிய முயற்சிகள் அடங்குகின்றன.
தற்போது, கையடக்கத் தொலைபேசிகளதான் (78.9%) வீடுகளில் மிகவும் சர்வ சாதரணமாகப் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் சாதனமாகும். இதனையடுத்து தொலைக்காட்சி சாதனங்கள் (78.3%) மற்றும் வானொலி (68.9%) ஆகயின உள்ளன. கையடக்கத் தொலைபேசி பாவனையில் ஏற்பட்ட எழுச்சி அலை ஸ்மார்ட்போன் பாவனையின் பிரபலத்தைப் பிரதிபலிக்கிறது. அதில் 3.5 மில்லியன் 2015 இல் பயன்படுத்தப்பட்டன. இச்சாதனங்கள் இலவச குரல் அழைப்புகள் (VOIP), எஸ்எம்எஸ், வானொலி கேட்டல், வலைத்தளங்களை தேடுதல் மற்றும் முகநூல், வட்ஸ்அப் மற்றும் டுவிட்டர் முதலிய பிரபல சமூக ஊடக மேடைகளைச் சென்றடைல் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுவதனால், இது ஊடக பாவனையை பின்தொடர்ந்தறிவதை மிகவும் சிரமமானதாக்கியுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்புபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தொலைத்தொடர்புகள் துறையில் நிலவும் பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கும் அதனை ஒழுங்குபடுத்துவதற்குமென 1996 இல் தாபிக்கப்பட்டது. எனினும், பின்னர் வந்த அரசாங்கங்கள் (தமது) அரசியல் நோக்கங்ளை அடைவதற்கான ஒரு கருவியாக அதனைப் பயன்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எவ்வித உரிய நடைமுறைகளுமின்றி தனி மனிதர்களுக்கும் கம்பனிகளுக்கும் பக்கச்சார்பான முறையில் ஒலிபரப்பு அலைவரிசைகளை (தொலைக்காட்சி மற்றும் வானொலி) வழங்கினார். இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரகளும் 2017 இல் லங்கா ஈ நியுஸ் ஐ முடக்கியமை மற்றும் மிக அண்மையில் தெல்தனிய மற்றும் திகன ஆகிய இடங்களில் ஏற்பட்ட இன மோதல்களுக்கான ஒரு பதிற் செயற்பாடாக நாடு முழுதும் சமூக ஊடகங்கள்மீது தடை விதித்தமை உள்ளிட்ட இணைய உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதற்காக வுசுஊளுடு ஐ பயன்படுத்தினார்.
2017 ஆம் ஆண்டு புது டெல்லியில் சைபர் ஸ்பேஸ் தொடர்பன உலக மாநாட்டில் உரையாற்றுகையில் பிரதம மந்திரி ரனில் விக்கிரமசிங்க வலைத்தள நிடுநிலைக்கான தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார். எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக இன்னும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த கடமைப்பொறுப்பின்மையானது, நாட்டில் தனியார் கம்பனிகளின் செயற்பாடுகளில் பிரதிபலிக்கின்றது. 2018 மே மாதமளவில், விஜேய நியுஸ்பேப்பர்ஸ் இலங்கையில் ஒரு முன்னணி கையடக்க தொலைபேசி நடத்துனரான எயடெல் உடனான தனது பங்காண்மையை அறிவித்தது. இது எயர்டெல் பாவனையாளர்கள் டெயிலி மிரர் லங்காதீப மற்றும் தமிழ் மிரர் ஆகயிவற்றின் இணைய பதிப்பிற்கான இலவச வாய்ப்பை பெறுவதற்கு வழிவகுத்தது.
மூலம்
Colombo Telegraph. (2017). Sri Lanka’s ICT Policy Gone ‘Off Road.’
Retrieved from Colombo Telegraph on 25 July 2018.
Dissanayake, R. (2011). Information Communication Technology (ICT) Policy of Sri Lanka and its Impacts to Socioeconomic Development: A Review of Sri Lankan Experience.
Retrieved from A Review of Sri Lankan Experience. Journal of Education and Vocational Research on 25 July 2018.
Information and Communication Technology Agency.
Retrieved from ICTA on 25 July 2018.
Net Neutrality in Sri Lanka: An Obituary. (2018).
Retrieved from Read Me on 25 July 2018.
Rebuilding Public Trust – An assessment of the media industry and profession in Sri Lanka. (2016).
Retrieved from the Secretariat for Media Reforms on 25 July 2018.
RTI Reveals Lanka E News Blocked on Order from President’s Office. (2018).
Retrieved from Ground views on 25 July 2018.
Telecommunications Regulatory Commission of Sri Lanka. Functions and Responsibilities.
Retrieved from TRC on 25 July 2018.