ஹிரு செய்திகள்
வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் லிமிடெட்டின் கீழ் உள்ள ஹிரு நியூஸ், மும்மொழிகளிலும் செய்தி இணையத்தினை கொண்டுள்ளது. இது ரெயினோர் சில்வா ஹோல்டிங்சின் மற்றுமொரு நிறுவனமாகும். இது அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டுச் செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தக வாணிபச் செய்திகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை ஹிரு நியூஸ் வழங்குகின்றது. ஹிரு எஃப்.எம் மற்றும் ஹிரு டி.வி உட்பட சகோதர இணையமான ஹிரு கொஸிப் என வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உள்ள அனைத்து ஊடக நிலையங்களின் இணைப்புக்களையும் ஹிரு நியூஸ் இணையத்தளத்தில் காணலாம்.
நுகர்வோர் வீதம்
தரவுகள் கிடைக்கவில்லை
உரிமையாண்மையின் வகை
தனியார்
பிராந்திய உள்ளடக்கம்
சர்வதேசம்
உள்ளடக்கத்தின் வகை
இலவசம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
ஹிரு நியூஸ் என்பது ரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு
அங்கத்தவராகவுள்ள வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானது.
நிறுவனத்தின் எல்லாப் பங்குகளும் ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டடிற்குச் சொந்தமானது.
ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டட் முழுவதும் சில்வா குடும்பத்திற்குச் சொந்தமானது. ரேய்னர் சில்வா 33 .33 வீதம், அவரது தயார் 33 .33 வீதம் அவரது தந்தை 33 .33 வீத பங்குகளை வைத்துள்ளனர்.
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
தரவுகள் கிடைக்கவில்லை
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ஹிரு நியூஸ் என்பது வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
கீழுள்ள மும்மொழி செய்தி இணையத்தளமாகும். இந்நிறுவனமானது இலங்கையின் பிரபல வர்த்தகர்
ரேய்னர் சில்வாவிற்குச் சொந்தமானது. இவர் இலங்கையின் மிகப்பெரிய வானொலி நிறுவனங்களில் ஒன்றான வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவுள்ளார். ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சன்ரைஸ் குழுமம் பிரித்தானியாவில் இலங்கையிலும் தனது செயல்பாட்டை நிறுத்தியபோது இந்த நிறுவனத்தை இவர் பொறுப்பெடுத்தார். இவரின் சகோதரர் வின்சன்ற் சில்வா ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா இவரின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 2018 ம் ஆண்டு 11 ம் திகதி உச்ச நீதிமன்றம் துமிந்த சில்வாவினால் செய்யப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டை நிராகரித்தது.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
வின்சன்ற் சில்வா ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், நிறுவனத்தின் தலைவர் ரெய்நர் சில்வா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 2018 ம் ஆண்டு 11 ம் திகதி உச்ச நீதிமன்றம் துமிந்த சில்வாவினால் செய்யப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டை நிராகரித்தது. வின்சன்ற், 2018ம் ஆண்டுவரை ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தனி உடைமையைக் கொண்டிருந்த ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்ரேட் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளர்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சுதேவா ஹெட்டியாராச்சி ஹிரு தொலைக்காட்சி ஹிரு வானொலி ஆகியவற்றின் செய்திப்பணிப்பாளராகவுள்ளார். ரேடியோ சிலோனில் லமா பிட்டிய என்கின்ற நிகழ்ச்சியில் பின்னணி குரல் கொடுப்பவராக ஊடகத்துறையில் நுழைந்தார். ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடில் 1998ல் இணைந்தார்.
தொடர்பு
Asia Broadcasting Corporation (Pvt) Limited
35th Floor, East Tower World Trade Center, Colombo 1
Tel: +94 11 2 337 555
Fax: (+94) 112 346 870
E-mail : md@asiabroadcasting.lk
Website: www.hirunews.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
ஹிரு நியூஸ் இணையத்தளம், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரெய்நர் சில்வா ஹோல்ட்டிங் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டபோதும், இது உருவாக்கப்பட்ட வருடம் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை. உருவாக்கப்பட்ட வருடம் தொடர்பான தகவல்களை ஹிரு நியூஸ் அணியினர் உறுதிப்படுத்தாதபோதும் MOM ஆராச்சிக் குழுவினர் பதிவுசெய்த பதவி சார் தகவல்களை உறுதிப்படுத்தினர். பங்குதாரர்கள் பற்றிய தகவல்கள் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன.