ரி வி 1
ரி வி 1 ஒரு சிங்கள - ஆங்கில மொழி தொலைக்காட்சி. எம் ரி வி சனல் பிரைவேட் லிமிடெட்டினால் நிர்வகிக்கின்றது. இது கப்பிடல் மகாராஜா ஓர்கனைசேஷன் லிமிடெட்டின் துணை நிறுவனம். 2016 ல் ஸ்தாபிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டிற்கான ரசிகர்கள் பற்றிய தரவுகள் இலங்கைச் சந்தை ஆராய்ச்சிப் பணியகத்திடமிருந்து (LMRB) பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் படி, இது 0.7 % பார்வையாளர்களை கொண்டுள்ளது.
நுகர்வோர் வீதம்
0.7%
உரிமையாண்மையின் வகை
தனியார்
பிராந்திய உள்ளடக்கம்
எம் ரிவி சனல் (பிரைவெட்) லிமிட்டட்
உள்ளடக்கத்தின் வகை
தேசிய
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
13558
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
Free to air
நிறுவுனர்
இலவசம் சேவை
நிறுவுனரின் ஈடுபாடுகள்
1992
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
ராஜேந்திரம் மகாராஜா மற்றும் ராஜேந்திரம் ராஜ மகேந்திரன் ஆகியோர் சிரச டிவி யின் ஸ்தாபகர்களும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன ஸ்தாபகர்களுள் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகன்களுமாவர். ராஜேந்திரம் மகாராஜா 'வட்டி' என்ற சொந்த இலச்சினையைக் கொண்ட ஒரு தொழில்முயற்சியாளரும் ஹில்ட்டன் ஓட்டலின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியவருமான பத்மா மகாராஜாவை மணமுடித்தார். அவர் 2016 ஆம் ஆண்டில் காலமானார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் கனிஸ் ராஜேந்திரத்தை மணமுடித்தார். அவர் இந்நிறுவனத்தின் கீழ்வரும் ஒரு கம்பனியான ரியுமஸ் சலூனின் ஊநுழு ஆவர். இவ் இரு சகோதரர்களும் இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்ற அதேவேளை ராஜேந்திரம் மகேந்திரராஜா காலப்போக்கில் ஓய்வு பெற்றார். 2018 இல் ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகன் சசீந்திரன் ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையேரூபவ் ராஜமகேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். ராஜேந்திரம்; மகாராஜா மற்றும் பத்மா மகேந்திரன் தம்பதிகளின் மகனாகிய பிரதீப் மகாராஜாவும் இந்நிறுவனத்தில் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். 2015 இல் பிரதீப் மகாராஜா இலங்கை மேர்சண்ட் வங்கியின் (MBSL) பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சுசாரா டினால் - எம் ரி வி சனல் (பிரைவெட்) லிமிடெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி. முன்னர் சிரச தொலைக்காட்சியின் தலைவராக செயற்பட்டுள்ளார். இவர் கம்பஹா மாவட்டத்தில் மேல் மாகாணசபை தேர்தலில் 2014 ல் போட்டியிட்டார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
ரினாஸ் மொஹமட் ரி வி 1 இன் தலைவர்
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
TV 1 MBC/ MTV Channels (Pvt) Limited 45/3, Braybrook Place, Colombo-02 Email: talk2us@tv1.lk Tel: +94114650750 Website: http://tv1.lk/
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தரவுகள் மீதான தகவல்கள்
டிவி 1 இன் உத்தியோகபூர்வ வலைத்தளம் அதன் ஸ்தாபகர் பற்றியோ அல்லது கம்பனியின் கட்டமைப்பு பற்றியோ
எவ்வித விபரங்களையும் தருவதில்லை. அது அவ்வலைவரிசையின் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்பு விபரங்கள் பற்றிய நிரல் ஒன்றைத் தருகிறது. ஆவுஏ அலைவரிசை பிறைவேட் லிமிட்டெட்டின் தாய்க்கம்பனியான கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் டிவி 1 ஐ ஒரு அலைவரிசையாக நிரல்படுத்தவில்லை. எனினும்ரூபவ் அக் கம்பனியைத் தொடர்பு கொண்டதன்பேரில் டிவி 1 அதன் சகோதர அலைவரிசைகளான சிரச டிவி, சக்தி டிவி மற்றும் MTV ஆகியன போலவே MTV அலைவரிசை (பிறைவேட்) லிமிட்டட்டினால் நிறுவகிக்கப்படுகிறதென்று விளக்கிக் கூறப்பட்டது. CEO மற்றும் அலைவரிசையின் தலைவர் ஆகியோர் பற்றிய தகவல்களும் இக் கம்பனியை நேரடியாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், இவ் அலைவரிசை அதன் தொடக்கத்திலிருந்து பல பெயர் மாற்றங்களுக்கு உள்ளாகியது என்று அறிவிக்கப்பட்டது. அவற்றுள் சில ஆவுஏ ஸ்போட்ஸ், மற்றும் செனல் வன் ஆகியன அடங்கும். எனினும், இவ் அலைவரிசை 2016இல் டிவி 1 என உத்தியோகபூர்வமாக மீளப் பெயரிடப்பட்டது. இக் கம்பனியின் பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான ரசிகர்கள் பற்றிய தரவுகள் இலங்கைச் சந்தை ஆராய்ச்சிப் பணியகத்திடமிருந்து (LMRB) பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி த கெப்பிட்டல் மகாராஜா ஓகனைசேசன்
லிமிட்டட்டை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.