கண்காணிப்பாளரைக் கண்காணிப்பவர் யார்?
ஊடகப் பரப்பில்,உரிமையாளராகவும் கட்டுப்பாட்டாளராகவும் அரசாங்கத்தின் இரட்டைப் பாத்திரமானது, இந்த விளையாட்டில் ஒரு வீரராக மட்டுமன்றி நடுவராக மற்றும் விதிமுறைகளை உருவாக்குபவராகவும் காட்டிநிற்கிறது. 30 ஊடகங்களுக்கு உரிமையாளாராக இருப்பதன் மூலம், அரசாங்கமானது அச்சு, வானொலி, தொலைகாட்சி மற்றும் இணையம் என்று எண்ணைக்கையில் மிகப்பெரிய ஒரு போட்டியாளராக வைத்துள்ளது. இவ்வாறான அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்களின் பொதுவான நோக்கமானது பொது மக்களுடன் தொடர்பு கொள்வதேயாகும். பெருமளவில் இவை தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதாக அமைவதோடு, அநேக நேரங்களில் சில குறிப்பிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிக் குறிப்பிடுவதாகவும் அமைகிறது. இதற்கு மாற்றாக ஊடகங்களின் நெறிப்படுத்துபவர் ஊடக வெளியில் சமநிலைத்தன்மையைப் பேணுபவராகவும் ஏற்படுத்துபவராகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் சூழ்நிலையில், அரசாங்கமானது உரிமம் வழங்குவது மற்றும் நெறிப்படுத்துவது ஆகிய இரண்டையும், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களினூடாக மேற்பார்வை செய்கிறது. இந்தக் கட்டுரையானது இவ்விரட்டைப் பாத்திரங்களானவை எவ்வாறு மிக மோசமான ஆதாயநலன் முரண்பாட்டை ஏற்படுத்தலாம் என்பது குறித்து விளக்குகிறது. அப்படியான முரண்பாடானது அரசாங்கத்தை ஊடகவெளியைக் கட்டுப்படுத்தும் வகையில் தனது தகவல்களை பெருப்பித்தும், தனக்கு எதிரான விமர்சனங்களைக் கட்டுப்படுத்தும் இயல்பைத் தரும்.
ஆதாயநலன் முரண்பாடு
அரசாங்கம் கீழ்வரும் ஊடக நிறுவனங்களை உரிமை கொள்வதோடு கட்டுப்படுத்துகிறது :
- பதிப்பகம் - அசோஸியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிட்டட் (ANCL / லேக் ஹவுஸ்)
- தொலைக்காட்சி ஒளிபரப்பு - இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC)/சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN)
- வானொலி ஒலிபரப்பு - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN)
- இணைய ஊடகங்கள் - News.lk ஆனது அரசாங்கத் தகவல் திணைக்களத்தினாலும் ANCL இன் இணையப் பதிப்புக்களினாலும் நடத்தப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கமானது ஊடகப் பரப்பை பின்வரும் நிறுவனங்கள் மூலமாகக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.
- TRC - தொலைத்தொடர்புகளுக்கான தேசிய ஒழுங்குபடுத்தல் முகவரகம்
- SLBC - வானொலி நிலையங்களைப் பராமரிப்பதுடன் அனுமதிப் பாத்திரங்களை வழங்குகிறது
- SLRC - தொலைகாட்சி அலைவரிசைகளைப் பராமரிப்பதுடன் அனுமதிப் பாத்திரங்களை வழங்குகிறது
- இலங்கை பத்திரிகைப் பேரவை (SLPC) - அச்சு ஊடகங்களைப் பதிவு செய்வதுடன் நெறிமுறைப்படுத்துகிறது.
அரசாங்கத்தின் இந்த ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரங்களானவை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் TRC ஆகியவற்றின் கீழ் ஒரு படிநிலைக்கீழான கட்டமைப்பில் செறிவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் இந்த ஒழுங்குமுறை அமைப்புக்கள் அமைச்சு மற்றும் TRC ஆகியவற்றுக்குக் கீழே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கமானது சட்ட ரீதியாக இந்த ஆட்டத்தில் விதிகளை உருவாக்கவல்லதாகவும், ஆட்டத்தின் மற்றப் போட்டியாளர்களினை ஒழுங்குமுறைப் படுத்துவதாகவும், அதே நேரம் தாமும் பங்கேற்கக்கூடியதாகவும் இருக்கிறது. நடுவராகவும் ஆட்டக்காரராகவும் இருப்பவர் தம்மையும் போட்டியாளர்களையும் மேற்பார்வை செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசாங்கத்தின் இரட்டைப் பாத்திரம் முரண்பாட்டுக்குள்ளாகிறது.
பெருப்பித்தல் மற்றும் அடக்குமுறைக்கூடான கட்டுப்பாடு
அரசாங்கத்தின் உரிமைத்துவம் மற்றும் ஒழுங்குபடுத்தல் பாத்திரங்களின் நிலைகள் மூலமாகக் கிடைக்கும் ஆதாய முரண்பாடானது ஊடக வெளியில் ஒரு மாபெரும் அனுகூலத்தைத் தருகிறது. மறுபக்கத்தில் அது அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடக நிலையங்கள் மூலமாக தன்னுடைய சொந்தக் குரலை பெருப்பித்துக்கொள்ளக்கூடிய ஆற்றலையும் கொண்டுள்ளது. அதேநேரத்தில் அரசாங்கமானது தனியாரால் உரிமை கொல்லப்பட்டுள்ள ஊடக நிறுவனங்கள் மேல் தனது வலுவை செலுத்தவும் முடியும். எவ்வாறாயினும் தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்கள் மேல் செலுத்தப்படும் அதே கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது தெளிவற்ற ஒன்றாகவேயுள்ளது. உதாரணத்துக்கு வெகுஜன ஊடக அமைச்சர் 1966 ஆம் ஆண்டின் ளுடுடீஊ சட்ட இலக்கம் 37இன் 44ஆம் பிரிவுக்கமைய தனியார் வானொலிகளின் நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்வதற்கும், உரிமையைக் கட்டுப்படுத்துவற்கும், பங்குகளை மாற்றிக்கொள்வதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட அதற்குச் சொந்தமான ஊடக நிறுவனமும் இந்த ஆட்டத்தின் ஒரு பங்கேற்பாளராக இருக்குமிடத்தில் அதுபற்றிய வெளிப்படைத்தன்மையின் குறைபாடானது, இந்தக் கட்டுப்பாட்டுக்குட்படாமல் தப்பிக்க முடியும். இப்படியான ஒழுங்குமுறையின்மை காரணமாக, அரசாங்கம் தன்னுடைய தகவலை அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் மூலமாக பெருப்பித்து வெளிக்கொணர முடியும்.
மறுபுறம், அதற்கு மற்ற நிறுவனங்களை, குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கின்றவையை ஒடுக்கக்கூடிய சக்தியும் உள்ளது. இந்த ஆற்றலானது ஒழுங்கமைப்புடன் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட பங்கேற்பாளர்கள் சக்திவாய்ந்த அரசியல் பங்கேற்பாளர்களுடன் தொடர்புபட்டிருப்பது இந்த இயலுமையை மேலும் கூட்டிணைத்துள்ளது. உதாரணத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் வுசுஊயின் தலைவராகக் கடமையாற்றுவதன் காரணமாக, ஜனாதிபதிக்கு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதில் தலையிடுவதற்கான சாதகத்தன்மை காணப்படுகிறது. இந்த சாத்தியத்துக்கான அண்மைய உதாரணம், தகவல் உரிமைச் சட்டக் (RTI) கோரிக்கை ஒன்றுக்கான நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பதில்.அந்தக் கடிதமானது 'தவறான தகவல்களை வெளியிட்டதற்காகவும் ஜனாதிபதியின் நன்மதிப்பை சேதப்படுத்தியதற்காகவும்' பதின்மூன்றில் நான்கு இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டதாக வெளிப்படுத்தியது.
மேலதிகமாக, அரசியல்ரீதியானது என்று அடையாளப்படுத்தப்படும் ஒரு நகர்வாக, Telshan Networks Limited (TNL) ற்குச் சொந்தமான அலைபரப்பி ஒன்றை மூடுவதற்கான நீதிமன்ற உத்தரவை, அவர்களது ஒளிபரப்புஅனுமதிப்பத்திரம் காலாவதியானதாகக் குறிப்பிட்டு,பெற்றதைக் குறிப்பிடலாம். இந்த விவகாரம் 'அரசியல் சார்ந்தது' என்று குறிப்பிடுவதற்கு, அந்த மூடுதல் சம்பந்தப்பட்ட பிரிவுகள் அரசியல் சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் தொடர்புபட்டவை : ஜனாதிபதியின் செயலாளர் வுசுஊயின் தலைவராக இருக்கிறார்,வுNடுஇன் உரிமையாளர், ஷhன் விக்கிரமசிங்க, தற்போதைய பிரதமரின் சகோதரராவார். மூடப்படுவதற்கு முன்னர் TNL ஜனாதிபதியை விமர்சிக்கும் நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பியிருந்தது. ஒரு பரந்துபட்ட மட்டத்தில், நெறிமுறைகளைப் பிறப்பித்து ஒழுங்குபடுத்துபவருக்கும் ஒழுங்குபடுத்தப்படுபவருக்கும் இடையிலான வேறுபாடு குறைவாகக் காணப்படும் தன்மையானது, அரசாங்கத்துக்கு இலங்கையின் ஊடகப் பரப்பை வடிவமைக்க கணிசமான பலத்தை வழங்கியிருப்பதோடு, பலவேளைகளில் விதிகளைத் தமக்கு சாதகமாக வளைக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது. உரிமையாளராகவும் ஒழுங்குபடுத்துபவராகவும் - ஒரே நேரத்தில் செயற்படும் அதன் இரட்டைப் பாத்திரமானது இலங்கையின் ஊடகப் பரம்பலில் அசாத்தியமான கட்டுப்பாட்டை செலுத்துவதற்கான இயல்பை வழங்குகிறது.