ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிட்டட்
ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட் இலங்கையில் லங்காசிறி இணையத்தளத்தை மேற்பார்வை செய்கின்றது. இந் நிறுவனம் 2015 ம் ஆண்டு இலங்கையில் பதிவுசெய்யப்பட்டது. அனாலும், இது 2001 ம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்டது. இது 2002 ல் செய்தி வெளியிடத்தொடங்கியது. ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமை சமமாக மயூரன் நவரத்னசாமி, ஆறுமுகம் நவரத்னசாமி ஆகியோருக்கு சொந்தமானது.
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
டிஜிட்டல் ஒளிபரப்பு இணையம்
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2015
நிறுவுனரின் ஈடுபாடுகள்
லங்காசிறி இணையத்தளமானது சிவஞானம் சிறிகுகனினால் உருவாக்கப்பட்டது. சிறிகுகன், தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சகோதரர். சிவஞானம் சிறிகுகன் இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்து தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறார்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Smart Network (Pvt) Limited
No. 317/1/1, K.B. Christy Perera Mawatha, Colombo 13
Tel (Sri Lanka): +94 011 331 4421
Tel (United Kingdom): +44 208 133 8373
Tel (Switzerland): +41 435 080 178,
Tel (Canada): +1 647 694 1391
Tel (France): +33 182 880 284
Tel (Germany): +49 231 2240 1053
Tel (United States of America): +1 678 389 9934
Tel (Australia): +61 291 881 626
Email: lankasri@lankasri.com
Website: www.lankasri.com/srilanka
வரி / அடையாள இலக்கம்
PV106723
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
சஞ்சய் என அழைக்கப்படும் மயூரன் நவரட்னசாமி இலங்கை லங்காசிறியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 2003 ல் இருந்து பணியாற்றியுள்ளார். மயூரன் இலங்கை லங்காசிறியின் 50 வீத உரிமையைக் கொண்டுள்ள அதேவேளை அவரின் தந்தை ஆறுமுகம் நவரட்னசாமி ஸ்மார்ட் நெட்வேக்ஸ் (பிரைவெட்) லிமிடெட் ஊடக மீதி 50 வீத உரிமையைக் கொண்டுள்ளார். அத்துடன் பிரித்தானிய கம்பெனிகள் திணைக்களத்தின் தரவுகளின்படி மயூரன், லங்காசிறி லிமிடெட், மங்கோட்ரீ டெக் லிமிடெட், சிகிதி லிமிடெட், அரிட்மார்ட் நெட்வேக் லிமிடெட், ஸ்டார் மார்க்கெட்டிங் அன்ட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளராகவுள்ளார்.
ஆறுமுகம் நவரட்னசாமி - மயூரன் நவரட்னசாமியின் தந்தை. ஸ்மார்ட் நெட்வேக்ஸ் (பிரைவெட்) லிமிடெட் ஊடாக மீதி 50 வீத உரிமையைக் கொண்டுள்ளார். பணிப்பாளர் சபை உறுப்பினர்.
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
லங்காசிறி இணையத்தளமோ அதனோடு இணைந்த இணையத்தளங்களோ இவற்றின் உரிமையாண்மை, பணிப்பாளர்கள் மற்றும் நிறுவன அமைப்பு பற்றிய தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. அத்துடன், ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட் தனக்கென ஒரு உத்தியோகபூர்வ இணையத்தளத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால் பொதுவில் கிடைக்கக்கூடிய இரண்டாம்தர தகவள்மூலங்கள் மற்றும் நிறுவன பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய நிறுவன பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.