வசந்தம் தொலைக்காட்சி
வசந்தம் டிவியை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு நிர்வகிக்கின்றது. இது அரசுக்கு சொந்தமானது. இது 2009 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது, மேல்மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் படிப்பதுயாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு விதரிக்கப்பட்டது. செய்திகள், தொடர் நாடகங்கள், சமய, சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் பிலிபரப்பப்படுகின்றன.
நுகர்வோர் வீதம்
2.4%
உரிமையாண்மையின் வகை
அரசுக்குச் சொந்தமானது
பிராந்திய உள்ளடக்கம்
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு
உள்ளடக்கத்தின் வகை
தேசிய
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு
உரிமையாண்மைக் கட்டமைப்பு
13554
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன
குழுமம் / தனி உரிமையாளர்
1982 ம் ஆண்டு 6 ம் இலக்க சட்டத்தின் கீழ் சுயாதீன தொலைக்காட்சி தேசியமயமாக்கப்பட்டபோது, இது, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனதின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போது, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வருகின்றது.
O-13595
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
Free to air
நிறுவுனர்
இலவசம் சேவை
நிறுவுனரின் ஈடுபாடுகள்
வசந்தம் டிவி அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுக் கம்பனியான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பினால் (ITN) தாபிக்கப்பட்டது. டெல்சான் நெட்வேர்க் (பிரைவேட்) லிமிட்டெட்டின் (TNL) தலைவரும் தற்போதைய பிரதம மந்திரிய ரனில் விக்கிரமசிங்கவின் சகோதரருமான சான் விக்கிரமசிங்கவினால் தாபிக்கப்பட்ட ஐவுN 1979 இல் ஒரு தனியார் துறை கம்பனியாக தனது செயற்பாடுகளைத் தொடக்கியது. எனினும், அது, 1979 ஆம் ஆண்டு ஜூன் 39/4 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியினால் தேசியமயமாக்கப்பட்டது.
தற்போது, ITN தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றில் இரு ஊடக மேடைகளை நிருவகிக்கின்றது. தொலைக்காட்சித் துறையில், அது ITN மற்றும் வசந்தம் ஆகியவற்றை நிருவகிக்கின்றது.
சிங்கள மொழி தொலைக்காட்சி அலைவரிசையான ITN 7 வீதமான பார்வையாளர்களைச் சென்றடையும் அதேவேளை, தமிழ் மொழி அலைவரிசையான வசந்தம் டிவி 2.4 வீத பார்வையாளர் அடைவைக் கொண்டிருக்கிறது. வானொலி ஒலிபரப்புத்துறையில் ஐவுN 0.48 வீத நேயர்; அடைவைக் கொண்டுள்ள ITN TV மற்றும் 1.6 வீத நேயர்; அடைவைக் கொண்டுள்ள வசந்தம் FM ஆகியவற்றை நிருவகிக்கின்றது.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
சந்தான திலகரத்ன சுயாதீன தொலைக்காட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி. இவர் சர்வதேச சீன வானொலியின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இணைய முன்னர் சத் எவ் எம் வானொலியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சந்தான திலகரத்ன சுயாதீன தொலைக்காட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி. இவர் சர்வதேச சீன வானொலியின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இணைய முன்னர் சத் எவ் எம் வானொலியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
ஜெ. எம். திலக ஜயசுந்தர சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக 2018 ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். இவர் நிதி மற்றும் ஊடக அமைச்சின் (அபிவிருத்தி / திட்டமிடல்) மேலதிக செயலாளர். இவரின் முன்னைய பதவிகள் கீழ்வருவன:
பணிப்பாளர் மற்றும் தொடர்பு அதிகாரி - இலங்கையின் ஆசிய உற்பத்தி நிறுவனம் #
பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் - இலங்கையின் தேசிய உற்பத்தி செயலகம் #
தலைவர் - இலங்கையின் தேசிய உற்பத்தி நிறுவனம் #
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர்
நிதிசார் தகவல்கள்
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
Independent Television Network Wickramasinghepura, Battaramulla, Sri Lanka Telephone: +94 11 2774 424, +94 11 2774 725, +94 11 2773 289 Fax: +94 11 277 4591, +94 11 277 4421 Email: manager@vasantham.lk Website: http://www.vasantham.lk/
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தரவுகள் மீதான தகவல்கள்
வசந்தம் டிவியை நிருவகிக்கும் கம்பனியான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் (ITN) 2015 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் (ITN) உரித்தாண்மை தொடர்பான விபரங்களைத் தருகிறது. ஊரித்தாண்மை தொடர்பான மேலும் தரவுகள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெறப்பட்டன. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் ITN தொடர்பாக கிடைக்கும் மிக அண்மைய தரவுகள் 2018 ஆண்டிற்கானவையாகும். இவ் ஊடக நிலையத்தின் ஸ்தாபகர் மற்றும் முக்கிய நபர்கள் தொடர்பான விபரங்களுக்காக இரண்டாம் நிலை மூலங்கள் உசாவப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக்
கோரி 2018 யூலை 20 ஆந் திகதி சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு லிமிட்டட்டை (ஐரிஎன்) அணுகியபோது
அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.