அல்லிராஜா சுபாஷ்கரன்
லைக்காமொபைல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரரும், தலைவருமாக உள்ளவர் அல்லிராஜா சுபாஸ்கரன். லைக்கா மொபைல் குழுமத்தின் ஸ்தாபகரான அவர், லைக்காமணி, லைக்காடெல் மற்றும் லைக்கா ஃபிளை நிறுவனங்களின் தலைவரும் ஆவார். சர்வதேச அழைப்பு அட்டை நிறுவனமாக ஆரம்பமான அல்லிராஜாவின் லைக்கா மொபைல் ஐரோப்பாவின் 23 நாடுகளுக்கு பரவியதுடன், அமெரிக்காவின் பல பகுதிகளிலும் விஸ்தரிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லைக்கா மொபைல் 10 ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈட்டியது. 2010 ஆம் ஆண்டில் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா மற்றும் மனைவி பிரேமா (பிரேமதர்ஷினி) சுபாஸ்கரனுடன் இணைந்து ஞானம் அறக்கட்டளையை ஆரம்பித்தார். பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இந்த அறக்கட்டளை நிதியுதவி வழங்குகின்றது.
வியாபாரம்
தொடர்பாடல்
லைக்கா மொபைல்
லைக்கா சட்
நிதி சேவை
லைக்கா மெரிட்
விமான மற்றும் பயண சேவை லைக்கா ஃபிழை
கைதொலைபேசி சேவை
லைக்கா டோக்
லைக்கா டெல்
தொலைக்காட்சி சனல் வழங்கல்
லைக்கா ரிவி
அதிஷ்டலாபம்
லைக்கா லோடோ
திரைப்பட தயாரிப்பு
லைக்கா ப்ரொடக்ஷன்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
பிரேமதர்ஷினி சுபாஷ்கரன் - அல்லிராஜா சுபாஷ்கரனின் மனைவி. 2007 ல் இருந்து 2017 வரை இவர், போர்த்துக்கலை தளமாக கொண்ட பெட்டிகோ கொமெர்சியோ இன்டர்நேஷனல் லிமிடெட்டின் அதிகூடிய பங்குதாரர். இன் நிறுவனம், சுபாஷ்கரனின் லைக்கா குழுமத்தின் நாமங்களான லைக்கா மூவி, லைக்கா மொபைல், லைக்கா ஃபிழை போன்றவற்றை உடமையாக கொண்டுள்ளது. 2016 ல், இவர் லைக்கா ஹெல்த் இன் பணிப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
The Immigrant Phone Card Seller Making The Bollywood Movie You Have To See, Forbes (2017), Accessed on 22 September 2018
தரவுகள் மீதான தகவல்கள்
ஈ.ஏ.பி நிறுவனத்தை கொள்வனவு செய்வதில் அல்லிராஜா சுபாஸ்கரனின் பங்கு தொடர்பில் 2018 இல் பல பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன. நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஈ.ஏ.பி நிறுவன வருடாந்த அறிக்கையின் பிரகாரம் 39.99 வீதப் பங்குகளை புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மென்ட் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதை அறிய முடிகின்றது. 2017 ஆம் ஆண்டில் புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மென்ட் நிறுவனம் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நஷனல் நிறுவனத்திற்கு சொந்தமானது. இது அல்லிராஜாவின் மனைவி பிரேமதர்ஷினிக்கு சொந்தமானது. அல்லிராஜா சுபாஸ்கரன் தான் ஈ.ஏ.பி நிறுவனத்தை வாங்கினார் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் இந்த ஆய்வு காலப்பகுதியில் கிடைக்கவில்லை. இலங்கையில் அல்லிராஜா முன்னெடுத்துவரும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கவில்லை.