ஷா எவ் எம்

ஷா எவ் எம் ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிடெட்டினால் நிர்வகிக்கப்படுகின்றது என இதனுடைய உத்தியோகபூர்வ இணையதளத்திலும், ரெய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் இனுடைய உத்தியோகபூர்வ இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது ஷா எவ் எம் வானொலி நிலையத்தின் சகோதர வானொலி நிலையங்கள் ஹிரு எவ் எம், சூரியன் எவ் எம், கோல்ட் எவ் எம், மற்றும் சண் எவ் எம் ஆகியன. இது செய்தி மற்றும் உரையாடல் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது
நுகர்வோர் வீதம்
3.93%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசிய
உள்ளடக்கத்தின் வகை
இலவச ஒலிபரப்பு
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
ஷா எவ் எம் என்பது ரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு
அங்கத்தவராகவுள்ள வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானது.
நிறுவனத்தின் எல்லாப் பங்குகளும் ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டடிற்குச் சொந்தமானது.
ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டட் முழுவதும் சில்வா குடும்பத்திற்குச் சொந்தமானது. ரேய்னர் சில்வா 33 .33 வீதம், அவரது தயார் 33 .33 வீதம் அவரது தந்தை 33 .33 வீத பங்குகளை வைத்துள்ளனர்.
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2002
நிறுவுனரின் ஈடுபாடுகள்
இவ்வானொலி நிலையம், ரெய்னர் சில்வாவிற்குச் சொந்தமான ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடினால் உருவாக்கப்பட்டது.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
வின்சன்ற் சில்வா ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், நிறுவனத்தின் தலைவர் ரெய்நர் சில்வா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீரப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளார். வின்சன்ற், 2018ம் ஆண்டுவரை ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் தனி உடைமையைக் கொண்டிருந்த ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்ரேட் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் உள்ளார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
கெவின் நதிரா சில்வா – அலைவரிசையின் தலைவராக பணியாற்றி வருகின்றார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
சுதேவா ஹெட்டியாராச்சி ஹிரு தொலைக்காட்சி ஹிரு வானொலி ஆகியவற்றின் செய்திப்பணிப்பாளராகவுள்ளார். ரேடியோ சிலோனில் லமா பிட்டிய என்கின்ற நிகழ்ச்சியில் பின்னணி குரல் கொடுப்பவராக ஊடகத்துறையில் நுழைந்தார். ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடில் 1998ல் இணைந்தார்.
கனில் ஜயரட்ண பொறியியல் பணிப்பாளர் மற்றும் தொழிநுட்ப பிரதம செய்தியாசிரியர்
தொடர்பு
Asia Broadcasting Corporation (Pvt) Limited
No. 35th Floor, East Tower, World Trade Center, Colombo 1
Tel: +94 112 686 670 / 114 385 882
Email: md@asiabroadcasting.lk
Website: www.shaafm.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
ஷா எவ் எம்மின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உரிமையாண்மை தொடர்பான தகவல்கள் காணப்படவில்லை. அனால் வானொலி தொடர்பான சுருக்கமான விபரம் பதியப்பட்டுள்ளது. உரிமையாண்மை தொடர்பான தகவல்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கப்பெற்ற ஆண்டு வருமான அறிக்கையிலிருந்து பெறப்பட்டன. நேயர் தரவு வீதம் இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தால் 2017ம் ஆண்டு தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் இருந்து பெறப்பட்டது. ஜுலை மாதம் 20 ம் திகதி 2018 அன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட குழுவினர், ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டை அணுகிய நிலையிலும் அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை. மத்திய வங்கியின் 2017 ம் ஆண்டு நாணய மாற்று விகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.